பிபிஎஃப் திட்டம் முதிர்ச்சி அடைந்தால் என்ன செய்ய வேண்டும்?.. இத கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Public Provident Fund Maturity | பொதுமக்களுக்காக அரசு செயல்படுத்தும் முதலீட்டு திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த நிலையில், இந்த திட்டத்தில் முதிர்வு செய்து அதன் முதலீட்டு காலம் முடிவடைந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்தால் தான், எதிர்காலத்தை நிதி பாதுகாப்பாக மாற்ற முடியும். இவ்வாறு சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அவற்றில் சில சிக்கல்கள் உள்ள நிலையில், பொதுமக்கள் முதலீடு செய்ய யோசிப்பர். இந்த நிலையில் தான், பொதுமக்களுக்காக அரசு சில வகையான பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund) ஆகும்.
இந்த நிலையில், அரசு வழங்கும் இந்த பாதுகாப்பான பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து, அந்த திட்டம் முதிர்ச்சி பெற்றுவிட்டது என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிபிஎஃப் திட்டம் முதிர்ச்சி அடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
இந்த பிபிஎஃப் திட்டத்தின் மொத்த முதிர்வு காலம் சுமார் 15 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தின் பயன்களை பெற வேண்டும் என்றால், 15 ஆண்டுகள் சிறுக சிறுக சேமிக்க வேண்டும். அதன் பிறகு அந்த திட்டத்தில் இருக்கும் மொத்த தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கை மூடித்தான் ஆக வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் வந்த பிறகு ஐந்து ஆண்டுகள் முதல் பலமுறை திட்டத்தை நீட்டிக்க முடியும்.




இதையும் படிங்க : UPI எப்படி சிறு வணிகர்களின் வாழ்க்கையை மாற்றியது?
முதிர்வு காலத்தை கவனிக்க வேண்டியது அவசியம்
பிபிஎஃப் முதலீட்டை பொருத்தவரை கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 15 ஆண்டுகள் அல்ல. கணக்கு தொடங்கப்பட்ட நிதி ஆண்டில் இருந்து 15வது நிதியாண்டு ஆகும். உதாரணமாக, 2011- 2012 நிதியாண்டில் நீங்கள் கணக்கு தொடங்கியிருந்தால், 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு அதில் இருந்து இந்த 15 ஆண்டுகள் கணக்கிடப்படும். எனவே, நீங்கள் எப்போது முதலீடு செய்தீர்கள், உங்கள் திட்டத்துக்கான முதிர்வு காலம் வந்துவிட்டதா என்பதை சரிப்பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க : தங்கத்தை வாங்கி வைத்தால் தான் எதிர்காலத்தில் பிழைக்க முடியும்.. முக்கிய நிபுணர் அறிவுரை!
முதிர்வுக்கு பிறகு என்ன செய்யலாம்?
தொடர்ந்து சேமித்தல்
உங்களது பிபிஎஃப் திட்டம் முதிர்வடைந்த பிறகு நீங்கள், புதிய பணம் செலுத்தி மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீட்டை நீட்டிக்கலாம்.
புதிய சேமிப்பு வேண்டாம்
புதிய சேமிப்பு தேவையில்லை என்றால், பணம் செலுத்தாமல் கணக்கை தொடரலாம்.
பெரிய தொகை தேவை
இதுவே உங்களுக்கு பெரிய தொகை தேவைப்படும் பட்சத்தில், முதிர்வுக்கு பிறகு திட்டத்தில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.