தவெக பெண்களுக்கு ஆபாச மெசெஜ்.. அட்ஜெஸ்ட் செஞ்சா பதவி.. மா.செ.வின் அந்தரங்க தொல்லை.. கொந்தளித்த மகளிரணி!
Tiruvannamalai Tvk North Secretary : திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யா மீது அந்தக் கட்சியின் மகளிர் அணியில் உள்ள பெண்கள் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக மகளிர் அணியினர் கூறியதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலை தவெக மாவட்ட செயலாளர் சத்யா மீது கட்சியின் மகளிர் அணியினர் பாலியல் புகார்களை முன் வைத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் சத்யா. இவர், தவெக மகளிர் அணியில் உள்ள பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, தவெக மகளிர் அணியினர் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர் சத்யா கட்சி அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் தனியாக இருந்தார். அந்தப் பெண்ணும் தவெக நிர்வாகி தான். சத்யாவிடம் அட்ஜெஸ்ட் செய்தால் தான் மாவட்ட பதவி வழங்குவதாக கூறுகிறார். அவரிடம் அட்ஜெஸ்ட் செய்யும் பெண்களுக்கு மட்டுமே கட்சிப் பதவி என சத்யா கடைப்பிடித்து வருகிறார்.
பெண்களிடம் சொத்தை எழுதி தரக்கோரி மிரட்டல்
இது தொடர்பாக மாவட்ட செயலாளர் சத்யா பேசிய வீடியோ காட்சிகள் எங்களிடம் உள்ளது. நான் அண்ணனாக பாதுகாப்பு வழங்குவேன் என்று கூறிவிட்டு தேர்தல் நேரத்தில் எங்களது சொத்தை எழுதிக் கொடுக்குமாறு மிரட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை தொடர்ந்து மிரட்டியதன் காரணமாக, ரூ. 27 லட்சம் மதிப்பிலான சொத்தை அவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கட்சிக்காக நாங்கள் எது செய்தாலும் அதை ஏன் செய்தீர்கள் என்று எங்களை தடுத்து வருகிறார்.
மேலும் படிக்க: ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரம்.. துப்பாக்கியால் சுட்டு தள்ளியிருப்பேன்.. பொங்கியெழுந்த ஜெயக்குமார்!




தவெகவில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் பெண்கள்
கட்சியில் சிறப்பாக செயல்படுவதாக நாடகமாடி வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் இங்கு வந்திருந்தார். அப்போது, அவரை சந்தித்து பேசினோம். அப்போது கூட, அவரை எதற்காக சந்தித்து பேசினீர்கள் எங்களை அடிக்க முயன்றார். அத்துடன், எங்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். இந்த பிரச்சனை பெரிதான நிலையில், போலீசார் உதவியுடன் தப்பித்துக் கொண்டார். இதனால், பலர் உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் உள்ளனர். மகளிர் அணிக்குள் பிரச்சனைகளை கிளப்பிவிட்டு விரோதத்தை பரப்பி வருகிறார்.
பெண்களுக்கு செல்போனில் ஆபாச மெசேஜ்
தவெக மீட்டிங்கில் நிர்வாகிகளை அனுமதிப்பதும், நாங்கள் யாரையும் மதிக்கவில்லை என்று கூறி புகார் வருவதாக டார்ச்சர் செய்து வருகிறார். மகளிர் சிறப்பு திட்டங்களில் எங்களை பங்கேற்க வைப்பது கிடையாது. மகளிர் அணியினருக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்பி ஒருமையில் வாடி, போடி என்று பேசி வருகிறார். எனவே, அவர் மீது தவெக தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். முன்னதாக, வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவை கண்டித்து மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசெஜ்? பாதுகாப்புக்காக தனி காவலர் நியமனம்.. விஜய் ஆட்சியை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி!