AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கூட்டத்தை பிளந்து ஓடி வந்த வெள்ள சட்டை.. ஒரு நொடி பதறிய முதல்வர் ஜோசப் விஜய்.. கொளத்தூரில் நடந்தது என்ன!

Chief Minister Vijay In Kolathur : கொளத்தூரில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை பார்ப்பதற்காக நடந்த சென்ற போது, ஒரு இளைஞர் அவரை நோக்கி வேகமாக ஓடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தை பிளந்து ஓடி வந்த வெள்ள சட்டை.. ஒரு நொடி பதறிய முதல்வர் ஜோசப் விஜய்.. கொளத்தூரில் நடந்தது என்ன!
முதல்வரை நோக்கி ஓடிவந்த இளைஞர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 13 Nov 2026 17:42 PM IST

தமிழகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி, சென்னை மாவட்டம், கொளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் முதல்வர் ஜோசப் விஜய் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்து அட்டை மற்றும் கேக் வழங்கி அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, பள்ளி மாணவர்களுக்கு தனது கைகளால் கேக்கை ஊட்டி விட்டு, பள்ளியில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திரும்பியபோது, பள்ளி வளாகத்தின் வெளியே முதல்வரை பார்ப்பதற்காக கூடியிருந்த பொதுமக்களை முதல்வர் விஜய் சந்தித்தார். அப்போது, வழி நெடுகிலும் நீண்ட தூரம் காத்துக் கொண்டிருந்த, பொதுமக்களை பார்ப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் நடந்து சென்றார். அப்போது, அவரைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்புக்காக சென்று கொண்டிருந்தனர்.

ஓடி வந்த இளைஞர்- அச்சமடைந்த முதல்வர் விஜய்

அப்போது, திடீரென வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்த நபர் கூட்டத்தில் இருந்து வெளியே குதித்து முதல்வர் விஜய்யை நோக்கி வேகமாக ஓடி வந்தார். இதைப் பார்த்த, பொதுமக்கள் சத்தம் எழுப்பிய நிலையில், முதல்வர் விஜயும், பாதுகாப்பு போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, முதல்வர் விஜய் சற்று அச்சத்துடன் தனது கைகளை தூக்கியவாறு சிறிது தூரம் பின்னோக்கி நகர்ந்து சென்றார். உடனே, உஷாரான பாதுகாப்பு போலீசார் அந்த இளைஞரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

மேலும் படிக்க: கதவும் உடைக்கல.. லாக்கரும் உடைக்கல.. ஆனா 50 பவுன் நகை மாயம்.. நாகர்கோவில் கூட்டுறவு வங்கியில் என்ன நடந்தது!

இளைஞரை மடக்கி பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள்

இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. முதல்வர் விஜய்யை நோக்கி ஓடி வந்த நபரை போலீசார் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கூட்டத்தில் இருந்து பேரிகார்டுகளை தாண்டி எகிறி குதித்து முதல்வரை நோக்கி எதற்காக ஓடி வந்தாய் என்பது தொடர்பாகவும், அந்த இளைஞர் யார், அவரது பெயர், ஊர், அவர் இந்த செயலில் ஈடுபட்டதற்கான நோக்கம் என்ன என்பது தொடர்பான பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“முதல்வரை நோக்கி ஓடி வந்த இளைஞர் வீடியோ”

 

View this post on Instagram

 

A post shared by Nambikkai India (@nambikkaiindia)

முதல்வர் விஜய்யின் பயணம் திடீர் ரத்து

முன்னதாக, குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற இருப்பதாகவும், இதில், முதல்வர் விஜய் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் முதல்வரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு கொளத்தூர் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இன்ஸ்டா ரீல்ஸ்க்காக அரிவாளை சுழற்றிய இளசுகள்.. பதிலுக்கு லத்தியை சுழற்றிய போலீசார்.. தூத்துக்குடியில் அதகளம்!

Follow Us