AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நீலக்கொடி அங்கீகாரம்.. 6- ஆவது முறையாக மாஸ் காட்டிய கோவளம் கடற்கரை.. இந்த முறையும் தமிழகம் முன்னிலை!

Tamil Nadu Beaches Blue Flag Certification : தமிழகத்தில் 4 மாவட்ட கடற்கரைகள் நீலக்கொடி அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதில், கோவளம் கடற்கரை தொடர்ந்து 6- ஆவது முறையாக நீலக்கொடி அங்கீகாரத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

நீலக்கொடி அங்கீகாரம்.. 6- ஆவது முறையாக மாஸ் காட்டிய கோவளம் கடற்கரை.. இந்த முறையும் தமிழகம் முன்னிலை!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 12 Nov 2026 20:05 PM IST

உலக அளவில் கடற்கரைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தர சான்றாக நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில், கோவளம் கடற்கரை 6- ஆவது முறையாக நீலக்கொடி அங்கீகாரம் பெற்று சாதனை படைத்துள்ளது. டென்மார்க் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில்

  • கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளி கடற்கரை.
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள காமேஸ்வரம் கடற்கரை.
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரியமான் கடற்கரை ஆகிய 3 கடற்கரைகளுக்கு 2026- 2027 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிகு சர்வதேச நீலக் கொடி அங்கீகாரம் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள கோவளம் கடற்கரை தொடர்ந்து 6- ஆவது முறையாக நீலக்கொடி அங்கீகாரத்தை பெற்று தக்க வைத்துள்ளது.

நீலக்கொடி அங்கீகாரம் எதற்காக வழங்கப்படுகிறது

கடற்கரைகளில் தூய்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு, குளிப்பதற்கான கடல் நீரின் தரம் மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட 33 சர்வதேச தர நிலைகளின் அடிப்படையில் இருந்து வரும் கடற்கரைகளுக்கு நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தரநிலைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றனவா என்பதை தேசிய மற்றும் சர்வதேச மதிப்பீட்டுக் குழுக்கள் ஆய்வு செய்த பின்னரே இந்த அங்கீகாரம் வழங்கப்படும். அத்துடன் அந்த அங்கீகாரம் புதுப்பிக்கப்படும்.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசு மறைக்கிறதா? எம்எல்ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரம் உள்ளதா.. அண்ணாமலை கேள்வி!

6- ஆவது முறையாக நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கோவளம் கடற்கரை

கடந்த 2021- ஆம் ஆண்டில் முதல் முறையாக கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி அங்கீகாரத்தை பெற்று தமிழகத்தின் முதல் கடற்கரையாக திகழ்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யப்பட்ட சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்து 2026- ஆம் ஆண்டிலும் தனது நீலக்கொடி அங்கீகாரத்தை கோவளம் கடற்கரை தக்க வைத்துள்ளது. கடந்த 2025- 2026 ஆம் ஆண்டில் மட்டும் கோவளம் கடற்கரைக்கு சுமார் 5.5 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலமாக தமிழகத்தில் நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை 4- ஆக உயர்ந்துள்ளது.

நீலக்கொடி அங்கீகார கடற்கரையில் தமிழகம் முன்னிலை

இதன் வாயிலாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதல் இடத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ் நீலக்கொடி கடற்கரை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு, வழிகாட்டும் துறையாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்று துறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கந்த சஷ்டி சூரசம்ஹாரம்.. திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

Follow Us