IPL 2027: ஐபிஎல் 2027 ஏலத்தில் முஸ்தஃபிசுர் ரஹ்மான்.. மேலும் 7 வங்கதேச வீரர்கள் பதிவு!
Mustafizur Rahman IPL return: கடந்த ஐபிஎல் 2026 சீசனில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சர்ச்சைக்குப் பிறகு, பிசிசிஐ மீண்டும் வங்கதேச வீரர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்காக முஸ்தஃபிசூர் உட்பட 7 வங்கதேச வீரர்கள் தங்கள் பெயர்களைச் சமர்ப்பித்துள்ளனர். டிசம்பர் 16 அன்று நடைபெறும் இந்த ஏலத்தில், சர்ச்சைகளுக்குப் பிறகும் வங்கதேச வீரர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பு, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானைச் சுற்றி கணிசமான சர்ச்சை நிலவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தஃபிசூரை வாங்கியிருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில், வங்கதேசத்தில் நடந்துகொண்டிருந்த போராட்டங்களின் போது சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் விவாதிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ-யின் (BCCI) வேண்டுகோளின் பேரில், கொல்கத்தா அணி ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பு வங்கதேச பந்து வீச்சாளரை விடுவித்தது. ஆனால் இப்போது, அடுத்த ஐபிஎல் 2027 சீசனுக்கு (IPL 2027) முன்னதாக, 7 வங்கதேச வீரர்கள் மீண்டும் ஏலத்திற்காக தங்கள் பெயர்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
ALSO READ: கேப்டன்ஷி வேண்டாம்.. பதவியை நிராகரிக்கும் அக்சர் படேல்.. கட்டாயப்படுத்தும் அணி நிர்வாகம்!
வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கான ஒரு சிறிய ஏலம் வருகின்ற 2026 டிசம்பர் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிசிசிஐ பல்வேறு கிரிக்கெட் வாரியங்களைத் தொடர்பு கொண்டது. இந்தப் பட்டியலில் வங்கதேச கிரிக்கெட் வாரியமும் இடம்பெற்றிருந்தது. ஆச்சரியப்படும் விதமாக, வெறும் 10 மாதங்களுக்கு முன்பு முஸ்தஃபிசூர் ரஹ்மானைச் சுற்றி ஒரு சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது பிசிசிஐ மீண்டும் வங்கதேச கிரிக்கெட் வீரர்களை பெயர்களுக்கு க்ரீன் லைட் கொடுத்துள்ளது.




மினி ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள்:
ஐபிஎல் 2027 மினி-ஏலத்திற்காக 7 வங்கதேச வீரர்கள் தங்கள் பெயர்களைச் சமர்ப்பித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இதில், முஸ்தஃபிசுர் ரஹ்மானும் ஒருவர். நஹீத் ராணா, ரிஷாத் ஹொசைன், ஹசன் மஹ்மூத், தௌஹித் ஹ்ரிதாய், டாஸ்கின் அகமது மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
இருப்பினும், ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை ஐபிஎல் இன்னும் வெளியிடவில்லை. அதற்கு முன்னதாக, 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை விடுவிக்கும். தங்கள் அணிகளால் விடுவிக்கப்படும் வீரர்களும் ஏலத்தில் சேர்க்கப்படுவார்கள். எனவே, ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.
ALSO READ: ஐபிஎல் 2028ல் மேலும் 2 அணிகள் சேர்ப்பு..? மறுத்த பிசிசிஐ!
2026 டி20 உலகக் கோப்பையைப் புறக்கணித்த வங்கதேசம்:
ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இருந்து முஸ்தஃபிசூர் ரஹ்மானின் விடுவிப்பு, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இத்தொடருக்கு ஒரு நடுநிலையான மைதானத்தை வங்கதேசம் கோரியிருந்தது. ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவாக, வங்கதேசம் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகியது.