AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

U19 Asia Cup 2026 Semi Final : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதற்கிடையில், அனைவரது பார்வையும் மீண்டும் ஆர்யவீர் மீது திரும்பியுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மகனான இவர், கடந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 160 ரன்களைக் குவித்து அசத்தினார்

U19 Asia Cup 2026 Semi Final : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
Aryavir Sehwag
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Nov 2026 10:52 AM IST

ஆண்கள் U19 ஆசியக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நவம்பர் 12, 2026 இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ஓமனில் உள்ள அல் அமீரத் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இதற்கிடையில், அனைவரது பார்வையும் மீண்டும் ஆர்யவீர் (Aryavir Sehwag) மீது திரும்பியுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மகனான இவர், கடந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 160 ரன்களைக் குவித்து அசத்தினார். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் நூர் அலி நியாசியை அவர் எதிர்கொள்ள உள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன; இதில் இந்தியா 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஆப்கானிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் இந்திய அணியே வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க : Team India: உலகக் கோப்பைக்கு பிறகும் கோலி விளையாடுவாரா..? பயிற்சியாளர் கொடுத்த இன்ப செய்தி!

இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆர்யவீர்

தற்போதைய நிலவரப்படி, இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக ஆர்யவீர் முதலிடத்தில் உள்ளார். அவர் 3 போட்டிகளில் விளையாடி, சராசரியாக 126 ரன்கள் வீதம் மொத்தம் 252 ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல், இஷான் சூட் தனது பந்துவீச்சால் அனைவரையும் கவர்ந்துள்ளார்; அவர் 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மிகச் சிறந்த எகானமி ரேட்டையும் (economy rate) கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் U19 அணியின் பிளேயிங் லெவன் (Playing XI): அபிதுல்லா நடார்ஜன், அமீர் ஹம்சா, பிலால் சுலைமான்கில், ஃபரிதுல்லா எஹ்சாஸ், முகமது அலி பராக்சாய், நோமன் சலார்சாய் (விக்கெட் கீப்பர்), நூர் நியாசி, ஷா ரஹிமி, சோஹைல் கான் (கேப்டன்), சுபான் அலி, தாஹர் சர்వారి. இந்தியா U19 விளையாடும் பதினொரு பேர் கொண்ட அணி (Playing XI): லக்ஷ்ய ராய்ச்சந்தானி (கேப்டன்), ஆர்யவீர் சேவாக், வி.கே. வினீத், அன்வாய் டிராவிட் (விக்கெட் கீப்பர்), அர்ஜுன் ராஜ்புத், யாஷ்பர்தன் சிங் சவுகான், மனல் சவுகான், மோஹித் உல்வா, ஆர்யன் சவ்சானி, காவ்யா பரேஷ் படேல், இஷான் சூட்.

இதையும் படிக்க : Arshdeep Engagement: நியூசிலாந்தில் காதல் ப்ரோபோசல்.. இணையத்தை ட்ரெண்டாக்கிய அர்ஷ்தீப் – சம்ரீன் ஜோடி!

மழை பெய்ய வாய்ப்பு

வானிலை நிலவரத்தை பொறுத்த வரை நவம்பர் 12, 2026  இன்று அல் எமிரேட்ஸில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை 25 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு மிகக் குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us