IPL 2027: ஐபிஎல் 2028ல் மேலும் 2 அணிகள் சேர்ப்பு..? மறுத்த பிசிசிஐ!
IPL 2028 Expansion: ஐபிஎல் 2028 சீசனில் 12 அணிகளாக விரிவாக்கம் செய்யப்படுவதாக வந்த செய்திகளை பிசிசிஐ மறுத்துள்ளது. புதிய அணிகளை சேர்ப்பது குறித்து எந்தவித திட்டமும், விவாதமும் தற்போது இல்லை என்றும், ஊடக தகவல்கள் உண்மை இல்லை என்றும் பிசிசிஐ செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது ஐபிஎல் 2027 சீசனை வெற்றிகரமாக நடத்துவதே முக்கிய கவனம். இதற்கிடையே, ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உலக அளவில் அதிகளவிலான டி20 லீக்குகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆண்டுக்கு ஆண்டு ஐபிஎல் மீதான ஆர்வமும் உச்சத்தை எட்டியுள்ளது. போட்டியின் அடுத்த ஐபிஎல் 2027 சீசன் (IPL 2027) தொடங்க இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், ஐபிஎல் தொடர்பான செய்திகளே பரவலாகப் பேசப்படுகின்றன. ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு வீரர்கள் பரிமாற்றம் செய்யப்படுவது பற்றியே பெரும்பாலான பேச்சுக்கள் உள்ளன. இருப்பினும், கடந்த 2 நாட்களாக ஒரு செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2028ம் ஆண்டுக்குள் ஐபிஎல்-லில் உள்ள அணிகளின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க பிசிசிஐ (BCCI) திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது இந்தச் செய்தியை மறுத்துள்ளது.
ALSO READ: பஞ்சாப் அணியில் ஹர்திக் பாண்ட்யா.. கேப்டன்ஷியில் மாற்றமா..?
சமீபத்திய தகவலின்படி, உலகின் மிகப்பெரிய டி20 லீக்கான ஐபிஎல்லில் மேலும், 2 புதிய அணிகளை சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை பிசிசிஐ ஆராயத் தொடங்கியதாக தகவல் வெளியாகியது. இது 2028 முதல் 2032 வரையிலான ஊடக உரிமை சுழற்சியின் போது நடக்க வாய்ப்புள்ளது. இந்த இரண்டு புதிய அணிகளும் வதோதரா மற்றும் புனே மையங்களாக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து, பிசிசிஐ தற்போது இந்த தகவல்களை மறுத்து அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.




இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சாய்கியா கூறுகையில், ”தற்போது பிசிசியிடம் அப்படி எந்தத் திட்டமும் இல்லை. ஐபிஎல்லில் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து பிசிசிஐயில் முறைப்படியான அல்லது முறைசாரா எந்த விவாதமும் நடைபெறவில்லை. தற்போது ஐபிஎல்-ஐ விரிவுபடுத்துவதற்கான சாத்தியம் இல்லை. ஊடகச் செய்திகளில் உண்மை இல்லை. பிசிசிஐயின் தற்போதைய கவனம் ஐபிஎல் 2027 சீசனை வெற்றிகரமாக நடத்துவதில் உள்ளது. ஏலத்தொகையை ரூ.150 கோடியாக உயர்த்தியதாக வெளியான செய்திகளிலும் உண்மை இல்லை. அதனால் அதுபோன்ற எதுவும் நடக்கவில்லை” என்று கூறினார்.
2022-ல் அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளின் வருகையால், ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகளை பிசிசிஐ சேர்த்தது. இதன்மூலம் அணிகளின் எண்ணிக்கை எட்டிலிருந்து பத்தாக உயர்ந்துள்ளது.
ALSO READ: இந்திய அணியில் திடீர் மாற்றம்.. நீக்கப்பட்ட படிதார்..! துணை கேப்டனாக இவரா..?
ஹர்திக் பாண்ட்யா அணி மாற்றம்:
ஹர்திக் பாண்ட்யா பஞ்சாப் கிங்ஸ் அணியிலும், அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இணைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த பரிமாற்றப் பேச்சுவார்த்தைகள் தற்போது உண்மையாகியுள்ளன. மும்பை அணியிடம் ஏற்கனவே அஷ்வின் குமார் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் உள்ளார். அஷ்வினி குமார், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதில் இரண்டு முறை 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் அடங்கும். அர்ஷ்தீப்பின் வருகை, மும்பை அணிக்கு ஒரு முழுமையான இந்திய வேகப்பந்து வீச்சுத் தாக்குதலைக் கொண்ட வாய்ப்பையும் வழங்குகிறது.