8-வது ஊதியக் குழு அறிக்கை எப்போது தாக்கல்? மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது சம்பள உயர்வு கிடைக்கும்?
8-வது மத்திய ஊதியக் குழுவின் வரையறைகள் (Terms of Reference) மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை 2025 அக்டோபர் 28-ம் தேதி பெற்றன. இதையடுத்து, 2025 நவம்பர் 3-ம் தேதி ஊதியக் குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2027 மே 3-ம் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
நவம்பர் 11, 2026: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், 2027-ம் ஆண்டு மே மாதத்திற்குள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, புதிய ஊதிய உயர்வு எப்போது அமலுக்கு வரும், அரசு எவ்வளவு காலத்தில் பரிந்துரைகளை ஆய்வு செய்யும், ஊழியர்களுக்கு 2027-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உயர்த்தப்பட்ட சம்பளம் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
8-வது ஊதியக் குழு அறிக்கை எப்போது தாக்கல்?
8-வது மத்திய ஊதியக் குழுவின் வரையறைகள் (Terms of Reference) மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை 2025 அக்டோபர் 28-ம் தேதி பெற்றன. இதையடுத்து, 2025 நவம்பர் 3-ம் தேதி ஊதியக் குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2027 மே 3-ம் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎஃப் முகாம் மீது துப்பாக்கிச்சூடு!
சம்பளம், படிகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து குழு தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும். இருப்பினும், அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதியே புதிய சம்பளம் வழங்கப்படும் தேதியாக இருக்காது.
இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு?
இறுதி அறிக்கைக்கு முன்பாகவே குறிப்பிட்ட சில அம்சங்கள் குறித்த ஆய்வுகள் நிறைவடைந்தால், அவற்றுக்கான இடைக்கால அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பிக்க ஊதியக் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இடைக்கால அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், அதன் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
மேலும் படிக்க: சமையலறையாக மாறிய ரயில்! செய்தித்தாள்களை விரித்து சாண்ட்விச் தயாரித்த குஜராத் குடும்பம் – வைரலாகும் வீடியோ!
2027-ல் சம்பள உயர்வு கிடைக்குமா?
ஊதியக் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகு, மத்திய அரசு அதன் பரிந்துரைகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு மேலும் 4 முதல் 6 மாதங்கள் ஆகலாம் என மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி. யாதவ் தெரிவித்துள்ளார். இந்த மதிப்பீட்டின்படி, ஆய்வு மற்றும் ஒப்புதல் நடைமுறைகள் 2027-ம் ஆண்டின் இரண்டாம் பாதி வரை நீடிக்கலாம்.
ஜனவரி 1, 2026 முதல் சம்பள உயர்வு அமலாகுமா?
8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கான இறுதி முடிவை மத்திய அரசுதான் அறிவிக்கும். பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, தேவையான அரசாணைகள் வெளியிடப்பட்ட பிறகே புதிய சம்பள விகிதம் மற்றும் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும். எனவே, ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும் தேதி மற்றும் நிலுவைத் தொகை வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.