சமையலறையாக மாறிய ரயில்! செய்தித்தாள்களை விரித்து சாண்ட்விச் தயாரித்த குஜராத் குடும்பம் – வைரலாகும் வீடியோ!
Viral Video: சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், 3-ம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்த ஒரு குடும்பத்தினர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நடுப்படுக்கை மற்றும் அருகிலுள்ள இருக்கைகளைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பது பதிவாகியுள்ளது. இதற்காக இருக்கைகளின் மீது செய்தித்தாள்களை விரித்துள்ளனர். பின்னர் பெண்கள் சிலர் ரொட்டித் துண்டுகளை அடுக்கி, அதில் காய்கறிகள் மற்றும் சட்னி சேர்த்து சாண்ட்விச் தயாரிக்கத் தொடங்கினர்.
நவம்பர் 11, 2026: ரயில் பயணத்தின்போது பயணிகள் அமரவும், ஓய்வெடுக்கவும் வழங்கப்படும் இருக்கைகளை சமையலறையாக மாற்றி உணவு தயாரித்த குஜராத் குடும்பத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் சுகாதாரம் மற்றும் பொது இடங்களில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் பெர்த்தில் சாண்ட்விச் தயாரிப்பு
I can’t defend my gujarat 😭🤦
This family of surat posted on Instagram that they were travelling in 3AC compartment
They’re making food on middle berth even this lady is saying that we could have bring electric toaster for making sandwiches https://t.co/7Jt4dGtQ68— તીખો ઘુઘરો #̢̛ͥ̀̽̽ͨ̌̓͆̇̀̽ͦͨͫͯ̏̎̇̈̚͜҉̕͢͏͡҉̸̶̛͢͡ (@7Npatel) November 10, 2026
சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், 3-ம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்த ஒரு குடும்பத்தினர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நடுப்படுக்கை மற்றும் அருகிலுள்ள இருக்கைகளைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பது பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: நாடு முழுவதும் புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு! 137 மருந்துகளுக்கு 96.45% வரை விலை குறைவு..
இதற்காக இருக்கைகளின் மீது செய்தித்தாள்களை விரித்துள்ளனர். பின்னர் பெண்கள் சிலர் ரொட்டித் துண்டுகளை அடுக்கி, அதில் காய்கறிகள் மற்றும் சட்னி சேர்த்து சாண்ட்விச் தயாரிக்கத் தொடங்கினர். ரயில் பெட்டியே தற்காலிக சமையலறையாக மாறியதுபோல் இந்தக் காட்சி அமைந்துள்ளது.
டோஸ்டரும் கொண்டு வந்திருக்கலாம்!
சாண்ட்விச் தயாரித்துக் கொண்டிருந்தபோது, குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மின்சார டோஸ்டரையும் கொண்டு வந்திருக்கலாம் என்றும், அப்படி கொண்டு வந்திருந்தால் சாண்ட்விச்சை கிரில் செய்துகூட சாப்பிட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தும் வீடியோவில் இடம்பெற்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மேலும் படிக்க: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎஃப் முகாம் மீது துப்பாக்கிச்சூடு!
இணையத்தில் கலவையான விமர்சனங்கள்
இந்த வீடியோவைப் பார்த்த சிலர் குடும்பத்தினரின் செயல்பாட்டை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பொதுப் போக்குவரத்தில் மற்ற பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று உணவு தயாரிப்பது சரியா என்றும், ரயில் பெட்டியை சமையலறையாகப் பயன்படுத்துவது சுகாதாரத்துக்கும் பொது ஒழுங்குக்கும் ஏற்றதல்ல என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரயில் என்பது பயணிப்பதற்கும் ஓய்வெடுப்பதற்குமான இடமே தவிர, சமையல் செய்வதற்கான இடமல்ல எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த வீடியோவின் உண்மையான இடம் மற்றும் பயணத் தேதி குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.