AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : மீண்டும் வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை.. இணையத்தை கண் கலங்க வைத்த வீடியோ!

Adopted Child Reunited with Parents in Andhra Pradesh | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், வளர்ப்பு பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : மீண்டும் வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை.. இணையத்தை கண் கலங்க வைத்த வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Nov 2026 01:18 AM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதில் சில வீடியோக்கள், மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். அந்த வகையில் தான், வளர்ப்பு பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தை ஒன்று மீண்டும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

மீண்டும் வளர்ப்பு பெற்றோருடன் இணைந்த குழந்தை

ஆந்திர பிரதேசத்தில் தங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தம்பதி இருவர் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை இந்து முறைப்படி சடங்குகள் செய்து தத்தெடுத்துள்ளனர். இந்த நிலையில் தான், அது குறித்து அடையாளம் தெரியாத நபர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தை மீட்கப்பட்டு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : திடீரென அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மாடுகள்.. உபியில் ஷாக் சம்பவம்!

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தீர்வு காண தம்பதியினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அக்டோபர் 16, 2026 அன்று குழந்தையை ஒப்படைக்குமாறு, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், அக்டோபர் 28, 2026 வரை குழந்தை ஒப்படைக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான், குழந்தை தனது வளர்ப்பு பெற்றோரை கண்டு அழும் வீடியோ வைரலான நிலையில், குழந்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை கண் கலங்க செய்துள்ளது. தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us