Viral Video : திடீரென அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மாடுகள்.. உபியில் ஷாக் சம்பவம்!
Uttar Pradesh Govt Hospital Shock | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் மாடுகள் சில திடீரென அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகில் நம்மை சுற்றி நடைபெறும் அசாத்தியமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் சில மருத்துவமனையின் வார்டுகளுக்குள் புகுந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
திடீரென அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மாடுகள்
மக்களுக்கு மிக எளிதாக மருத்துவ சேவை வழங்குவதற்காக, அரசு கிராமங்கள், நகரங்கள் என பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளை கட்டி சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால், இந்த மருத்துவமனைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு இல்லை, சுகாதாரம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அந்த வகையில் தான், தற்போது உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க : Viral : பீகார் இளைஞருக்காக கடல் கடந்து வந்த ரஷ்ய பெண்.. இணையத்தில் வைரலாகும் அழகிய காதல் கதையின் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
स्वास्थ्य मंत्री जी संज्ञान लें… अस्पतालों का औचक निरीक्षण करने आपकी जगह कोई और पहुंच गया है। https://t.co/bJiz5WQL0e
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 22, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனைக்குள், திடீரென சாலையில் சுற்றிக்கொண்டு இருந்த மாடுகள் உள்ளே நுழைகின்றன. அவை நோயாளிகளை அனுமதித்து வைத்திருக்கும் வார்டுகளுக்குள் நுழைகின்றன. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : தலைக்கவசம் அணியாமல் பைக்கில் ஸ்டைலாக சாகசம் செய்த பெண்.. ரூ.16,000 அபராதம்!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.