Viral : பீகார் இளைஞருக்காக கடல் கடந்து வந்த ரஷ்ய பெண்.. இணையத்தில் வைரலாகும் அழகிய காதல் கதையின் வீடியோ!
Russian Woman Travels to Bihar for Love | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனை காண பீகார் வந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். உலகின் ஏதேனும் ஒரு மூலையில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகும். அந்த வகையில், பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்ய பெண்ணை காதலித்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
பீகார் இளைஞரை காதலிக்கும் ரஷ்ய பெண்
ரஷ்யாவை சேர்ந்த பெண் ஜூலி, பீகாரை சேர்ந்தவர் ராகுல் யாதவ். இவர் ரஷ்யாவுக்கு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது ஜூலியை சந்தித்துள்ளார். இந்த நிலையில், அவர்கள் இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ராகுல் யாதவ் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் தான், ஜூலி தனது காதலனை காண பீகாருக்கு வந்துள்ளார். ராகுல் குடிசை வீட்டில் வாழ்ந்தாலும், ஜூலி அவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், ஜூலி தனது காதலனை காண பீகாருக்கு வந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : இனிப்புக்கடையில் கழிவறையில் வைத்து கழுவப்படும் பாத்திரம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
A Russian girl followed her love to India after Rahul Yadav from Bihar returned home from Russia.
Despite learning that he was in hiding, she insisted on staying with him, and their families have reportedly agreed to get them married in November. ❤️ https://t.co/bcCOl3QJi8
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 13, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஜூலி தனது காதலனை காண கையில் சிவப்பு நிற மலருடன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடம் ராகுலின் குடிசைக்குள் நுழையும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.