Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
நவராத்திரி - Navratri

நவராத்திரி - Navratri

இந்து மதத்தில் புரட்டாசி மாதம் ஆன்மிக காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் மிகப்பெரிய அமாவாசையான மஹாளய அமாவாசை முடிந்து பின்னர் வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விரதம் என்பது பெண் தெய்வங்களை வழிபடும் காலமாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் 3 நாட்கள் வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி லட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளான சரஸ்வதியையும் வழிபடுகின்றனர். இதன் கடைசி இரு நாட்கள் சரஸ்வதி பூஜை என்ற பெயரில் கல்வி பொருட்கள் வைத்தும், ஆயுத பூஜை என்ற பெயரில் நம்முடைய தொழில் சம்பந்தப்பட்ட பொருட்கள் வைத்து வீடுகளில், கடைகளில் வழிபாடு மேற்கொள்ளப்படும். நவராத்திரி காலத்தில் வீடுகள், ஆலயங்களில் கொழு கண்காட்சி வைக்கப்படும். மேலும் மைசூர், குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இப்படியான நவராத்திரி திருவிழா தொடர்பான தகவல்களை நாம் இங்கு காணலாம்

Read More

Mysuru Dasara 2025: மைசூர் தசரா திருவிழா.. ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?

Navratri Festival 2025: உலக புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா 2025, செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது. கோல்டன் பாஸ் (ரூ.6,500), ஜம்பு சவாரி (ரூ.3,500), பஞ்சின காவ்யா (ரூ.1,500) டிக்கெட்டுகள் ஆன்லைனில் https://mysoredasara.gov.in/ மூலம் இணையதளம் மூலம் கிடைக்கின்றன.

Navratri 2025: தொடர் விடுமுறை.. நவராத்திரியை சிறப்பாக்க போக வேண்டிய அம்மன் கோயில்கள்!

Best Amman Temples to Visit in India : இந்தியாவில் பல பிரபலமான சக்தி பீடங்கள் மற்றும் அம்மன் கோயில்கள் உள்ளன. இங்கு, பல்வேறு வடிவிலான தேவியருக்கு சிறந்த வழிபாடு செய்யப்படுகிறது. இன்று, நவராத்திரியின் போது புண்ணியம் தரும் ஐந்து முக்கிய அம்மன் கோயில்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

விரைவில் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகளை விற்க தொடங்கிய வியாபாரிகள்..!

நவராத்திரி விழா சீசனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவராத்திரி பொம்மைக் காட்சிகள் திறக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் கொலு பொம்மைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.