தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது ‘அகாண்டா டூ’ படம் தோல்வியடைந்த பிறகு, பாலகிருஷ்ணா புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பாலகிருஷ்ணா தற்போது மலையாள திரைப்பட இயக்குனர் மார்கோ படத்தை இயக்கிய ஹனீப் அடேனி உடன் ஒரு பெரிய பட தயாரிப்பிற்காக பேச்சுவார்த்தையில் உள்ளார் என்று தெலுங்கு திரைப்படம் சம்பந்தப்பட்ட வட்டங்களில் பரபரப்பு செய்திகள் பரவுகின்றன.