The Raja Saab: நீக்கப்பட்ட காட்சிகளுடன்.. ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் ‘தி ராஜா சாப்’.. எப்போது தெரியுமா?
The Raja Saab OTT Updates: தெலுங்கு சினிமாவில் உச்ச நாயகனாக கலக்கிவருபவர் பிரபாஸ். இவரின் நடிப்பில் இந்த் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான படம் தி ராஜா சாப். இப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவந்த நிலையில், இதன் ஓடிடி ரிலீஸில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸான விஷயம் ஒன்று உள்ளது
தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட நாயகனாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவருபவர் பிரபாஸ் (Prabhas). இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்தாலும், தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர். இவரின் நடிப்பில் தெலுங்கில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில், பான் இந்தியா அளவிற்கு வெளியான படம்தான் தி ராஜா சாப் (The Raja Saab). இதை இயக்குநர் மாருதி (Maruthi) இயக்க, பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. இதில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடிக்க, நடிகைகள் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), நிதி அகர்வால் (Nidhi Agarwal) மற்றும் ரித்தி குமார் போன்ற 3 முன்னணி நாயகிகள் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படமானது திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவந்தது. அந்த விதத்தில் மொத்தமாக சுமார் ரூ 200 கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளதாம். இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓடிடி ரிலீஸிலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விஷயம் உள்ளது.




இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் குரலில்.. ‘தாய் கிழவி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!
தி ராஜா சாப் பட ஓடிடி ரிலீஸில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் :
இந்த தி ராஜா சாப் படத்தின் திரையரங்க ரிலீஸின்போது சில காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த காட்சிகளை எல்லாம் சேர்த்து படக்குழு ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனமானது வாங்கியிருந்த நிலையில், 2026 பிப்ரவரி 6ம் தேதியில் இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: நாளை திரையரங்குகளில் வெளியாகும் வித் லவ் படம்… பிரிவியூ ஷோ பார்த்தவர்களின் விமர்சனம் இதோ
சரியாக நள்ளிரவு 12 மணியளவில் இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தி ராஜா சாய் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
Due to unforeseen circumstances and last-minute technical glitches, we’ve added the extended cut! ⚠️
Regret the inconvenience caused due to hype 🙂
India’s Biggest Superstar on JioHotstar | 6th Feb 👑#TheRajaSaabOnJioHotstar #TheRajaSaab #ExtendedCut #JioHotstar pic.twitter.com/3Kq7ofY8qT
— JioHotstar Telugu (@JioHotstarTel_) February 5, 2026
நடிகர் பிரபாஸின் இந்த தி ராஜா சாப் படமானது, கலக்கல் காமெடி, எமோஷ்னல், ஆக்ஷன் மற்றும் ஹாரர் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இப்படம் ரிலீஸிற்கு முன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுவே இப்படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு காரணம் என கூறப்படுகிறது. திரையரங்கை தொடர்ந்து, ஓடிடியில் இப்படத்திற்கு மேலும் சிறப்பான வரவேற்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.