நெல்லையில் திருமணம் முடிந்த மறுநாள் குழந்தை பெற்ற பெண்.. மாப்பிள்ளை ஷாக்!
Bride Delivers Baby Day After Wedding | திடருநெல்வேலியில் திருமணமான மறுநாளே இளம் பெண் குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புது மாப்பிள்ளை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாளையங்கோட்டை, நவம்பர் 21 : திருநெல்வேலியில் (Tirunelveli) திருமணமான மறுநாளே இளம் பெண் குறை பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து, தன்னை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டதாக அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், திருமணமான மறுநாளே இளம் பெண் குழந்தை பெற்ற சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருமணம் முடிந்த மறுநாள் ஷாக் கொடுத்த மணப்பெண்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும், தாழையூத்து அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் நவமர் 15, 2026 அன்று திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து இரவு கணவரின் வீட்டிற்கு அந்த பெண் வந்துள்ளார். அன்று இரவு தம்பதிக்கு முதலிரவும் நடந்துள்ளது.
இதையும் படிங்க : திருப்பரங்குன்றம் விவகாரம்.. தவெக அரசின் அடுத்த சட்ட நவடிக்கை என்ன முதல்வரே? மு.க.ஸ்டாலின் கேள்வி!
வீட்டு வாசலில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை
ஆனால், காலை தூங்கி எழுந்ததும் இளம் பெண்ணுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அவருக்கு ரத்த போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் தான் புது மாப்பிள்ளையின் வீட்டு வாசலில் 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தில் அடுத்த பேரதிர்ச்சி.. ரயிலில் 5 நாள்களாக கிடந்த பெண் சடலம்.. வலுக்கட்டாயமாக கற்பழித்து கொலை செய்த கொடூரன்!
காவல் நிலையத்தில் புகார் அளித்த புது மாப்பிள்ளை
குழந்தை இறந்து கிடப்பது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் தான், புது மாப்பிள்ளை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதாவது, தான் திருமணம் செய்த பெண் ஏற்கனவே கர்ப்பமாக இருந்ததாகவும், அதனை மறைத்து தன்னை திருமணம் செய்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் மீது நம்பிக்கை மோசடி, கருச்சிதைவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.