AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் 2 நாட்களுக்கு பகுதி நேரமாக ரத்து! நவம்பர் 21, 24-ல் சேவையில் மாற்றம்..

Changes in Chennai Sub Urban Train Service: சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.13, 10.48, 12.02 மற்றும் 12.30 மணிக்குப் புறப்படும் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் - செங்கல்பட்டு இடையே பகுதி அளவில் ரத்து செய்யப்படுகின்றன. 

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் 2 நாட்களுக்கு பகுதி நேரமாக ரத்து! நவம்பர் 21, 24-ல் சேவையில் மாற்றம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Nov 2026 07:22 AM IST

நவம்பர் 21, 2026: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் நவம்பர் 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் குறிப்பிட்ட மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய போக்குவரத்துச் சேவைகளில் ஒன்றாக புறநகர் மின்சார ரயில்கள் விளங்கி வருகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வேலைக்குச் செல்வதற்கும், கல்வி மற்றும் வணிகத் தேவைகளுக்காகவும் இந்த ரயில் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய போக்குவரத்து வசதியாக உள்ளன.

செங்கல்பட்டு பணிமனையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள்

இந்நிலையில், விழுப்புரம் வழித்தடத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக காலை 11.40 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை நான்கு மணி நேரம் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகளுக்கான அனுமதியும், மின்சார விநியோகத் தடையும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட மின்சார ரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமாகி 40 நாட்கள்.. தீர்வு வேண்டி காவல் நிலையத்தில் சிறப்பு கணபதி ஹோமம் செய்த ஆய்வாளர்!

பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.13, 10.48, 12.02 மற்றும் 12.30 மணிக்குப் புறப்படும் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு இடையே பகுதி அளவில் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்குப் புறப்படும் காலை 11.50 மணி, பிற்பகல் 12.30, 1.35, 2.15 மற்றும் 3.05 மணி ரயில்கள் செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள் கோயில் இடையே பகுதி அளவில் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க: மதுரை காவல் மரண வழக்கு.. காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளை பார்க்க குடும்பத்தினருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

மேலும், சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்படும் ரயில் காட்டாங்குளத்தூர் – செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் ரயில் செங்கல்பட்டு – காட்டாங்குளத்தூர் இடையேயும் பகுதி அளவில் ரத்து செய்யப்படுகிறது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்

இதுதவிர, திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்குப் புறப்படும் மின்சார ரயிலும், சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 1 மணிக்குச் செங்கல்பட்டு நோக்கிப் புறப்படும் மின்சார ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

எனவே, நவம்பர் 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகள் ரயில் சேவை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Follow Us