திருப்பரங்குன்றம் விவகாரம்.. தவெக அரசின் அடுத்த சட்ட நவடிக்கை என்ன முதல்வரே? மு.க.ஸ்டாலின் கேள்வி!
M K Stalin Latest Speech : திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தவெக அரசு சார்பில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை என்ன எடுக்கப்போகிறீர்கள் என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார் .
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு கடுமையாகப் போராடி தமிழகத்தின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்டி இருந்தது. தமிழக வெற்றிக் கழக அரசு அடுத்த கட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்பதை தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் விளக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் இன்று மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தின் பின்னணி
இதை எதிர்த்து திமுக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதுமட்டுமின்றி, தீபம் ஏற்ற சென்ற போது, போலீசார் அனுமதி அளிக்க மாட்டோம். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தனர். இதனை, ஆங்கில மொழியில் போலீஸ் அதிகாரி கூறிய வார்த்தைகள் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தது. அதுமட்டுமின்றி எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் போலீசார் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். தற்போது, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேலும் படிக்க: திருப்பத்தூரில் தனியாக நின்ற கார்.. ரத்த வெள்ளத்தில் இருவர் சடலம்.. போலீஸ் விசாரணை!
தீபத்தூண் விவகாரம் தொடர்பாக நடந்த விவாதம்
இதில், கார்த்திகை தீப தினத்தன்று திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி வழங்கி இடைக்கால தீர்ப்பு அளித்தது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூண் தீப தூண் கிடையாது. அது வெறும் கல் தூண் ஆகும் என்று வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது. இதனால், தமிழக வெற்றிக் கழக அரசும் திமுக பாதையில் பயணிப்பதாக இந்து முன்னணி, அதிமுக, வீ தி லீடர்ஸ் அண்ணாமலை ஆகியோர் விமர்சித்து இருந்தனர்.
மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தல்
தற்போது, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தவெக அரசுக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தவெக அரசை கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில்தான், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த பேரதிர்ச்சி.. ரயிலில் 5 நாள்களாக கிடந்த பெண் சடலம்.. வலுக்கட்டாயமாக கற்பழித்து கொலை செய்த கொடூரன்!