மது பிரியர்களே மகிழ்ச்சியான செய்தி! டாஸ்மாக்கில் விற்பனைக்கு வருகிறது வெளிநாட்டு மது வகைகள்.. முழு விவரம்!
TASMAC Sell Foreign Liquor : தமிழக டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில், என்னென்ன மது வகைகள் கிடைக்கும் என்பன உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 742 டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், 205 டாஸ்மாக் கடைகளில் மட்டுமே இறக்குமதி மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் உள்ளது. இவற்றில், சுமார் 538 வகையான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 301 வகையான விஸ்கிகள், 38 வகையான பிராந்திகள், 199 வகையான ஒயின்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வகையான மதுபானங்கள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்து வருகிறது. அத்துடன், அந்த வகை மதுபானங்கள் விற்பனை மற்றும் இருப்பு குறைவாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுக்கள் விற்பனை
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களை மேலும் கூடுதலான டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக, இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக “எஃப்” உரிமம் பெற்ற கடைகளை எஃப்., எல் 2 உரிமம் பெற்ற கடைகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும். இதற்காக மாவட்ட மேனேஜர்கள் தங்களது மாவட்டங்களில் உள்ள கடைகளை ஆய்வு செய்து விற்பனை வாய்ப்பு, கடையின் இட வசதி, வாடிக்கையாளர்களின் தேவை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தேனியில் தவெகவினர் செய்த செயல்.. அணை மதகுக்கு பூட்டு போட்டு பூட்டிய அதிகாரிகள்.. என்ன காரணம்!
டாஸ்மாக் கடை விவரங்களை அனுப்ப உத்தரவு
அதன்படி, டாஸ்மாக் கடைகளின் விவரங்களை இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 20- ஆம் தேதி) க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இறுதியாக தேர்வு செய்யப்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும். அதன்படி, தற்போது டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனுடன் சேர்த்து வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எத்தனை வகையான மதுக்கள் கிடைக்கும்
இந்த புதிய திட்டத்தின் வாயிலாக, சுமார் 174 வகையான மதுபானங்கள், 40 வகையான பீர்கள், 4 வகையான ஒயின்கள் ஆகியவை தமிழகத்தில் தயாரிக்கப்படும் வகைகளாகவும், 6 வகையான மதுபானங்கள் மற்றும் 5 வகையான பீர் மற்றும் 5 வகையான ஒயின் ஆகியவை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வகைகளாகவும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதற்காக சென்னையில் மட்டும் 676 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், 319 கடைகள் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரூ.700 கோடி ஹெராயின் பறிமுதல்! ஐஸ்கிரீம் வியாபாரிக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. வெளிவந்த பகீர் தகவல்!