AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதலீடுகளை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டி – ஆந்திராவுக்கு முதலீட்டு தகவல்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு – கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்

Guidance Tamil Nadu Clarification : தமிழக முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவுக்கு கசிந்ததாக கூறி, கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் இதனை கைடனஸ் தமிழ்நாடு முற்றிலும் மறுத்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

முதலீடுகளை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டி – ஆந்திராவுக்கு முதலீட்டு தகவல்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு – கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Nov 2026 17:41 PM IST

சென்னை, நவம்பர் 20 : தமிழக முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவுக்கு கசிந்ததாக கூறி, கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் இதனை கைடனஸ் தமிழ்நாடு முற்றிலும் மறுத்துள்ளது. கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் பெருமளவிலான ராஜினாமாக்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், ஊழியர்கள் பணியில் இருந்து விலகுவது இயல்பாக நடக்கும் நிகழ்வு எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்

இது தொடர்பாக கைடன்ஸ் தமிழ்நாடு சமூக வலைதள பக்கத்தில் வெளியான பதிவில், ஊடகங்களில் வெளியான செய்திகளில் குறிப்பிட்டுள்ளது போல, ஜூலை 2026ல் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் பெருமளவிலான ராஜினாமாக்கள் எதுவும் நடைபெறவில்லை. ஊழியர்கள் பணியில் இருந்து விலகுவது, ஒவ்வொரு நிறுவனத்திலும் இயல்பாக நடக்கும் நிகழ்வே. வேறு சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்வி படிக்க, இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் Guidance தமிழ்நாடு நிறுவன ஊழியர்களும் பணியில் இருந்து விலகுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ரூ.700 கோடி ஹெராயின் பறிமுதல்! ஐஸ்கிரீம் வியாபாரிக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. வெளிவந்த பகீர் தகவல்!

வேறு இடங்களில் வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்யும் ஊழியர்கள் உள்பட, எங்கள் ஊழியர்களின் தொழில்முறை லட்சியங்களை கைடன்ஸ் தமிழ்நாடு எப்போதும் மதிக்கிறது. 14 முதலீடுகளை ஈர்ப்பதில் அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாடு எப்போதும் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான போட்டியைக் கொண்டு செயல்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைடன்ஸ் தமிழ்நாடு வெளியிட்ட பதிவு

 

தமிழக தொழில்துறையின் கீழ் செயல்படும் கைடன்ஸ் தமிழ்நாடு (guidance tamilnadu) நிறுவனம் மாநிலத்தின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக தொழில் முதலீடுகள் தொடர்பான தகவல்களை ஆந்திராவுக்கு கசியவிட்டதாக கூறப்படும் புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இந் தகவலை கைடன்ஸ் தமிழ்நாடு மறுத்துள்ளது.

வெடித்த அரசியல் சர்ச்சை

முன்னதாக கடந்த திமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், தமிழகத்தின் சிறந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பங்களிப்புடன் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான அமைப்பு, தற்போதைய அரசின் அரசியல் அணுகுமுறையால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆந்திராவின்  ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவர் பல்லா சீனிவாச ராவ், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆந்திரா பிரத்யேக தொழில் கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகவும், மற்ற மாநிலங்களின் தொழில் கொள்கைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் ஆந்திராவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us