AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கார்த்திகை மகா தீபம்! திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்.. நாளை முன்பதிவு தொடக்கம்!

Tiruvannamalai Special Trains : தாம்பரம், செங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை சனிக்கிழமை தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ரயில்கள் குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கார்த்திகை மகா தீபம்! திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்.. நாளை முன்பதிவு தொடக்கம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 Nov 2026 16:08 PM IST

கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருவண்ணாமலை உண்ணாமுலையம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக தாம்பரம், செங்கோட்டை, திருச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், நவம்பர் 23- ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்படும் ரயில் (வ.எண்-06017) மறுநாள் காலை 4:40 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து நவம்பர் 24- ஆம் தேதி இரவு 10:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்-06018) மறுநாள் காலை 3:20 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரயிலில் 21 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

செங்கோட்டை டு திருவண்ணாமலை சிறப்பு ரயில்

இந்த ரயிலானது, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். செங்கோட்டை டு திருவண்ணாமலை சிறப்பு ரயிலானது செங்கோட்டையில் இருந்து நவம்பர் 23- ஆம் தேதி ( திங்கட்கிழமை) இரவு 8:45 மணிக்கு புறப்பட்டு ( வண்டி எண்-06071) மறுநாள் காலை 7:30 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். இதேபோல, மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து நவம்பர் 24- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு ( 06072) மறுநாள் காலை 10 மணிக்கு தென்காசியை சென்றடையும். இந்த ரயிலில் 19 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க: தமிழகத்தில் உருவான குட்டி காஷ்மீர்.. ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திருச்சி டு திருவண்ணாமலை சிறப்பு ரயில்

இந்த ரயிலானது அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருச்சி டு திருவண்ணாமலை வழியாக வேலூர் கண்டோன்மெண்டுக்கு நவம்பர் 23, 24, 25- ஆம் தேதிகளில் காலை 8:00 மணிக்கு சிறப்பு ரயில் ( வண்டி எண்- 06127) இயக்கப்படுகிறது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்

இந்த சிறப்பு ரயில் அன்றைய தினம் பிற்பகல் 2:50 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்டை சென்றடைகிறது. இதேபோல, மறு மார்க்கத்தில் வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து நவம்பர் 23, 24, 25- ஆம் தேதிகளில் இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ( வண்டி எண்: 06128) மறுநாள் காலை 7:20 மணிக்கு திருச்சியை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை சனிக்கிழமை ( நவம்பர் 21- ஆம் தேதி) 8:00 மணிக்கு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ.700 கோடி ஹெராயின் பறிமுதல்! ஐஸ்கிரீம் வியாபாரிக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. வெளிவந்த பகீர் தகவல்!

Follow Us