தமிழக முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவுக்கு கசிந்ததா? 15 அதிகாரிகள் பணிநீக்கம் என தகவல்.. வெடித்த அரசியல் சர்ச்சை!
Tamil Nadu Investment Data Leak Controversy : தமிழகத்துக்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் தொடர்பான தகவல்கள் ஆந்திராவுக்கு ரகசியமாக பகிரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தொடர்பாக தமிழக அரசின் அமைப்பான கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் பணியாற்றிய 15 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, நவம்பர் 19 : தமிழகத்துக்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் தொடர்பான தகவல்கள் ஆந்திராவுக்கு ரகசியமாக பகிரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தொடர்பாக தமிழக அரசின் அமைப்பான கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் பணியாற்றிய 15 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையை முன்னாள் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக முதலீட்டு தொடர்பான தகவல்கள் ஆந்திராவுக்கு கசிந்ததாக குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளை அமைக்கவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசின் தொழில்துறையின் கீழ் கைடன்ஸ் தமிழ்நாடு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்து கூறி முதலீடுகளை ஈர்ப்பது இந்த அமைப்பின் பணியாக கூறப்படுகிறது. ல் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிக்க : ஸ்டாலின் வெற்றியை பறித்தவர்! புரசை பாபு முதல் கொளத்தூர் எம்எல்ஏ பதவி வரை.. வி.எஸ்.பாபு கடந்து வந்த பாதை!
டிஆர்பி ராஜா கண்டனம்
It is deeply disheartening to see an institution built over decades by some of #TamilNadu’s finest minds being dragged through the mud by the present regime’s immature, social-media-driven politics.
Even more pathetic is the Government’s argument that investments will disappear because a handful of employees have left!
Is this government saying that Tamil Nadu’s investment machinery and industrial ecosystem really that weak?
The irony? Most of those who have now left were appointed during the ADMK regime (2016–21).
Did the DMK Government chase them out when we came to power? NO! We valued experience, respected individuals and ensured institutional continuity. Even when a very important investment promotion lead left for personal reasons, we maintained dignity.
Now, instead of showing leadership, this Government is undermining its own institution and as usual blaming the DMK for its failures!
STOP belittling the Department.
STOP undermining Tamil Nadu’s capabilities.No one can simply take investments away from Tamil Nadu. But incompetent, insecure and insensitive decision making can certainly drive them away!
Institutions need leadership, not political theatrics!
#TvkFails
— Dr. T R B Rajaa (@TRBRajaa) November 19, 2026
தவெக ஆட்சி அமைத்த பிறகு தமிழ்நாட்டுக்கு வரவிருந்த முக்கிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதாகவும், இதற்கு தவெக அரசின் நிர்வாக திறன் இல்லாததே காரணம் என்றும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பில் பணியாற்றிய சில அதிகாரிகள், தமிழகத்திற்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்களை ஆந்திர மாநில அரசு அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பில் பணியாற்றிய 15 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பணிநீக்கம் செய்யப்பட்ட 15 பேரில் மூன்று பேர் தற்போது ஆந்திர மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கடந்த திமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், தமிழகத்தின் சிறந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பங்களிப்புடன் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான அமைப்பு, தற்போதைய அரசின் அரசியல் அணுகுமுறையால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது
திமுக அரசு 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது, முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை வெளியேற்றாமல் அவர்களின் அனுபவத்திற்கும் திறமைக்கும் மதிப்பளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் பெரும்பாலானோர் அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : கரையைக் கடக்கும் அக்வான் புயல்.. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை? – வானிலை மையம் அப்டேட்!
குற்றச்சாட்டுகளை மறுத்த தெலுங்கு தேசம் கட்சி
தமிழகத்தின் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திரப் பிரதேசத்திற்குக் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அம்மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவர் பல்லா சீனிவாச ராவ், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆந்திரா பிரத்யேக தொழில் கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகவும், மற்ற மாநிலங்களின் தொழில் கொள்கைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் ஆந்திராவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.