AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திமுகவில் இணையும் முடிவில் செல்வப்பெருந்தகை? ஆதரவாளர்களிடம் கூறிய அந்த வார்த்தை.. என்ன நடக்கிறது காங்கிரஸில்!

Congress Former Leader Selvaperunthagai : காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு செல்வப்பெருந்தகை விளக்கமும் அளித்துள்ளார். அது தொடர்பான முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

திமுகவில் இணையும் முடிவில் செல்வப்பெருந்தகை? ஆதரவாளர்களிடம் கூறிய அந்த வார்த்தை.. என்ன நடக்கிறது காங்கிரஸில்!
செல்வப்பெருந்தகை-மு.க.ஸ்டாலின்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 19 Nov 2026 20:36 PM IST

தமிழக காங்கிரஸ் கட்சியில் தற்போதைய தலைமைக்கும், முன்னாள் தலைமைக்கும் பனிப்போர் நீடித்து வருவதால் முன்னாள் தலைமை செல்வப் பெருந்தகை, விரைவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த செல்வப் பெருந்தகை மீது அந்த கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்து விலகிய செல்வப் பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம் தாகூர் எம்பி காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறார். அத்துடன், தமிழக காங்கிரஸில் உள்ள உள்கட்சி பூசல் உள்ளிட்ட விவகாரங்களை விரைவில் மனம் திறந்து பேசுவேன் என்றும் செல்வப் பெருந்தகை தெரிவித்திருந்தார்.

மாணிக்கம் தாகூர் கருத்து எதிர் கருத்து தெரிவித்த செல்வப்பெருந்தகை

இது ஒருபுறம் இருக்க அண்மையில் கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். அத்துடன், வாட்ஸ்அப் தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை குற்றவாளியாக மாற்றிவிட முடியாது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வ பெருந்தகை பாவம் என்ற வார்த்தையை கடந்து சென்று விட முடியாது. அப்படி பார்த்தால், ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியும் பாவம் என்று சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் படிக்க: காலி தொகுதிகள் 6- ஆக உயர்வு! கொளத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? களமிறங்குகிறாரா ஸ்டாலின்!

வெட்டவெளிச்சமான மாணிக்கம்-செல்வப்பெருந்தகை மோதல்

இதன் மூலம், தமிழக காங்கிரஸில் மாணிக்கம் தாகூர், செல்வப் பெருந்தகை இடையே இருந்து வரும் மோதல் போக்கு மற்றும் இரு வேறு கருத்துகள் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், தமிழக காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மாணிக்கம் தாகூருக்கு, செல்வப் பெருந்தகை இடையே நாளுக்கு நாள் பனிப்போர் அதிகரித்து வருகிறது. திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் செல்வப் பெருந்தகை, விரைவில் அந்தக் கட்சியில் இணைந்து விடுவார் என மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

விரைவில் திமுகவில் இணைகிறாரா செல்வப்பெருந்தகை

அதற்கு, செல்வப் பெருந்தகை உள்ளாட்சி தேர்தல் வரை அமைதியாக இருக்குமாறு தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்று தெரிவித்தனர். இதனிடையே, தவெக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று செல்வப் பெருந்தகை குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு, காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன், செல்வப் பெருந்தகை எந்த கட்சியில் இருக்கிறார். இனி எந்த கட்சிக்கு செல்ல போகிறார் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு செல்வப் பெருந்தகை என் பயணம் தொடரும். விமர்சனங்களால் விலக மாட்டேன். அவதூறுகளால் அஞ்சவும் மாட்டேன். இதுதான் எனது அடையாளம். இதுதான் எனது அரசியல் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 70 நாள்கள் நீடித்த மர்மம்! ஹைகோர்ட்டில் நேற்று பொதுநல மனு.. இன்று வி.எஸ். பாபுவின் மரண அறிவிப்பு.. என்ன நடந்தது!

Follow Us