Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Rahul Gandhi

Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் ராகுல் காந்தி. 1970ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி பிறந்த ராகுல் காந்தி, ஹார்வர்ட் , கேம்பிரிஜ் போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்று இருக்கிறார். தந்தை ராஜீவ் காந்தி மற்றும் அவரது பாட்டி இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் காலடி எடுத்து வைத்தார் ராகுல் காந்தி. 2004ஆம் ஆண்டு முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல்முறையாக சென்றார். அதைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு கட்சி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு, 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த 2017ஆம் ஆண்டே தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் களம் கண்ட காங்கிரஸ், தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில், வயநாடு தொகுதியில் இருந்து எம்.பியானார். இத்தோல்வியை அடுத்து, கட்சி பதவியை துறந்தார். தோல்வியில் இருந்து கட்சியை மீட்டு கொண்ட வர, 2022ஆம் ஆண்டு பாரத் ஜோடோ மற்றும் நியாய யாத்திரை மேற்கொண்டார். அதன்பிறகு, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்ததை அடுத்து, தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்

Read More

கரூர் கூட்ட நெரிசல்.. ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்..

CM MK Stalin Thanks Rahul Gandhi: கரூர் கூட்ட நெரிசல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இடன் ராகுல் காந்தி கேட்டறிந்துள்ளார். இது தொடர்பான பதிவில், “இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

’வாக்கு திருட்டு நடந்தது 100% உண்மை.. ஆதாரம் இருக்கு’ மீண்டும் உறுதியாக சொன்ன ராகுல் காந்தி

Rahul Gandhi On Election Commission : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு குறித்து மீண்டும் பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, வாக்கு திருட்டு விவகாரத்தில் 100 சதவீதம் எங்களிடம் ஆதாரம் உள்ளதாக அவர் கூறினார். மேலும், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் அவர் விமர்சித்தார்.

பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின்.. ஜீப் பேரணியில் பங்கேற்பு

Voter Adhikar Yatra : பீகார் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். ராகுல் காந்தியுடன் ஜீப்பில் ஏறி, வாக்காளர் உரிமை யாத்திரையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். அவருடன் கனிமொழி எம்.பியும் உடன் இருந்தார். அதோடு, பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவும் இருந்தனர்.

பீகார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. ராகுல் காந்தியுடன் பேரணி.. என்ன மேட்டர்?

Rahul Gandhi Voter Adhikar Yatra : பீகாரில் எதிர்க்ட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று கலந்து கொள்கிறார். தர்பங்காவில் ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

ராகுல் காந்தியுடன் கைகோர்க்கும் முதல்வர் ஸ்டாலின்.. பீகாரில் ஒன்று கூடும் இந்தியா கூட்டணி தலைவர்கள்!

Rahul Gandhi Vote Chori Campaign : எதிர்க்ட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் நடந்து வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இவரோடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு.. நாளை செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணையம்..

ECI Pressmeet: சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் பிகாரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து நாளை தேர்தல் ஆணையம் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

’இறந்தவர்களுடன் டீ குடித்தேன்’ – தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல்காந்தி

Rahul Gandhi On ECI: தேர்தல் ஆணையம் தரப்பில் சிறப்பு வாக்காளர்கள் திருத்தம் மூலம் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் என நீக்கப்பட்ட நபர்களுடன் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தேநீர் அருந்தியதாக தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.. ஆவணங்களை சமர்பிக்க உத்தரவு..

EC Notice To Rahul Gandhi: பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்த நிலையில், கர்நாடகா தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கும் படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Rahul Gandhi: அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு! ராகுல் காந்திக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமீன்..!

Amit Shah Defamation Case: ஜார்க்கண்டில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றம், 2018-ம் ஆண்டு நடந்த பேரணியில் அமித் ஷாவை அவமதித்ததாகக் கூறப்படும் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராகுல் காந்தி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

Rahul Gandhi : 22 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல் காந்தி.. ஏன் தெரியுமா?

Rahul Gandhi Adopt 22 Childrens : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். குழந்தைகளின் கல்விச் செலவையும் ராகுல் ஏற்று உள்ளார். இதற்கான முதற்கட்ட தொகை 2025 ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘டிரம்ப் பொய்யர் என நாடாளுமன்றத்தில் கூறுவீர்களா?’ மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி!

Rahul Gandhi On Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். அப்போது, 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருடன் ஆபரேஷன் சிந்தூரை ஒப்பிட்டு மத்திய அரசு தவறு செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டினார். அதோடு, நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி கூறுவாரா எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Operation Sindoor : மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் – அமைதியாக இருந்த ராகுல் காந்தியால் சர்ச்சை!

Rahul's Silent Gesture : ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அப்போது இந்திய வீரர்களின் வீர தீர செயல்களை பாராட்டும் விதமாக கைத்தட்டுமாறு எம்பிக்களை கேட்டுக்கொண்டார். அப்போது ராகுல் காந்தி அமைதியாக அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

குடும்பம், இசை, உடற்பயிற்சி.. இதுவே ராகுல் காந்தியின் தனிப்பட்ட உலகம்..

Rahul Gandhi: ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை தவிர்த்து, அவரது தனிப்பட்ட வாழ்க்கை தனது குடும்பத்தை சுற்றியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஜூன் 19,2025 55 வது பிறந்தநாளை கொண்டாடிய ராகுல் காந்தி அவரது திருமண வாழ்க்கை குறித்த கேள்வி இன்னும் இருந்து வருகிறது.

ராகுல் காந்திக்கு புதிய சிக்கல் : ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

Rahul Gandhi faces legal heat : கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்த அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு எதிராக ஜார்ஹண்ட் சைபாசா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் வருகிற ஜுன் 26, 2025 அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

தேசிய ஹெரால்டு வழக்கில் திருப்பம்: யங் இந்தியனுக்கு கட்டாய நன்கொடைகள்?

National Herald Case:அமலாக்கத் துறை, தேசிய ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது 2000 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. யங் இந்தியன் நிறுவனத்திற்கு பெருமளவில் நன்கொடை வசூலித்ததாகவும், சொத்து அபகரிப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.