Gold Price : நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Price Reduced After 4 Days of Continuous Hike | சென்னையில் கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, பிப்ரவரி 26 : சென்னையில் தொடர்ந்து நான்கு நாட்களாக தங்கம் விலை (Gold Price) உயர்ந்த நிலையில், இன்று (பிப்ரவரி 26, 2026) சற்று விலை குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்திய டிரம்ப்
2026, ஜனவரி மாதத்தில் தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்தது. காரணம், அப்போது உலக அளவில் புவிசார் பதற்றங்கள் அதிகமாக இருந்ததன் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஜனவரி 29, 2026-க்கு பிறகு நிலமை அப்படியே தலைகீழாக மாற தொடங்கியது. அன்றைய தினம் முதல் தங்கம் கடும் சரிவை சந்திக்க தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய வரியின் காரணமாக தங்கம் விலை மீண்டும் விலை உயர தொடங்கியது.
இதையும் படிங்க : நிதி மேலாண்மைக்கு நடுத்தர வர்கத்தினர் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!
கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 17 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
| 18 பிப்ரவரி 2026 | ரூ.14,230 | ரூ.1,13,840 |
| 19 பிப்ரவரி 2026 | ரூ.14,500 | ரூ.1,16,000 |
| 20 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 21 பிப்ரவரி 2026 | ரூ.14,680 | ரூ.1,17,440 |
| 22 பிப்ரவரி 2026 | ரூ.14,680 | ரூ.1,17,440 |
| 23 பிப்ரவரி 2026 | ரூ.14,860 | ரூ.1,18,880 |
| 24 பிப்ரவரி 2026 | ரூ.14,890 | ரூ.1,19,120 |
| 25 பிப்ரவரி 2026 | ரூ.14,930 | ரூ.1,19,440 |
| 26 பிப்ரவரி 2026 | ரூ.14,920 | ரூ.1,19,360 |
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
டிரம்பின் உலகளாவிய வரி காரணமாக, கடந்த சில நாட்களாக தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,920-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு சவரன் ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.