AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஆர்சிபிக்கு எதிரான போட்டி.. ‘இட்லி தோசை’ பாடலை ஒலிபரப்பிய டிஜே.. பிசிசிஐ-யிடம் சிஎஸ்கே புகார்!

CSK Complains on RCB DJ Song: தென்னிந்தியாவில் உள்ள சில பிரிவினரின் ஒரே மாதிரியான பிம்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் பாடல் சமூக ஊடகங்களில் மீம்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தப் பாடல் மட்டுமல்லாமல், சிஎஸ்கே வீரர்கள் வெளியே இருந்தபோது டி.ஜே. தெரிவித்த கருத்துக்களும் மரியாதையற்றவை என்று சிஎஸ்கே நிர்வாகம் கருதுகிறது.

IPL 2026: ஆர்சிபிக்கு எதிரான போட்டி.. ‘இட்லி தோசை’ பாடலை ஒலிபரப்பிய டிஜே.. பிசிசிஐ-யிடம் சிஎஸ்கே புகார்!
சென்னை - பெங்களூருImage Source: Jio Hotstar
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Apr 2026 17:42 PM IST

ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், களத்திற்கு வெளியே ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. நேற்று முன் தினம் அதாவது 2026 ஏப்ரல் 14ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிகளுக்கு இடையே நடந்த போட்டி, ரன்கள் எடுப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஸ்டேடியத்தில் ஒலித்த இசை தற்போது பிசிசிஐ-யின் கவனத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொண்டு சென்றுள்ளது. ஆர்சிபி நிர்வாகம் தங்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக சிஎஸ்கே நிர்வாகம் தனது ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

ALSO READ: காயத்துடன் சீறிபாய்ந்த கோலி.. கதிகலங்கி லக்னோ தோல்வி..!

போட்டியின் போது என்ன நடந்தது?

இந்த சர்ச்சைக்கான முக்கிய காரணம், பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் ஒலிபரப்பப்பட்ட ஒரு வைரல் பாடல்தான். தோசை, இட்லி, சாம்பார், சட்னி போன்ற வார்த்தைகளைக் கொண்ட அந்தப் பாடலை டி.ஜே. ஒலிபரப்பியதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்ப்பு தெரிவித்தது. தென்னிந்தியாவில் உள்ள சில பிரிவினரின் ஒரே மாதிரியான பிம்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் பாடல் சமூக ஊடகங்களில் மீம்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தப் பாடல் மட்டுமல்லாமல், சிஎஸ்கே வீரர்கள் வெளியே இருந்தபோது டி.ஜே. தெரிவித்த கருத்துக்களும் மரியாதையற்றவை என்று சிஎஸ்கே நிர்வாகம் கருதுகிறது.

ஐபிஎல் போட்டிகளில் டிஜேக்கள் உள்ளூர் அணிக்கு ஆதரவாகப் பாடல்களைப் பாடுவதும், உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடல்களை இசைப்பது வழக்கம். இந்த விஷயத்தில் அந்த டிஜே வரம்பு மீறிவிட்டார் என்று சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் தெளிவுபடுத்தினார். இதுகுறித்து பேசிய அவர், ”டிஜேக்கள் உள்ளூர் அணிக்கு ஆதரவளிப்பது இயல்பானதுதான். ஆனால், எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. எங்கள் வீரர்களுக்கு எதிராக சில பொருத்தமற்ற கருத்துக்கள் கூறப்பட்டன. இதைக் கருத்தில் கொண்டு, நாங்கள் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளோம். எதிரணியை அவமதிப்பதற்கோ அல்லது அவர்களின் மன உறுதியைக் குலைப்பதற்கோ அந்த டிஜே பொறுப்பல்ல. அது விளையாட்டு மனப்பான்மைக்கு எதிரானது. அவர்கள் எதிரணியினரை அவமதிப்பதற்காக அங்கு இல்லை” என்று கூறினார்.

தோசை மற்றும் இட்லி பாடலால் சர்ச்சை:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியின்போது இசைக்கப்பட்ட பாடலான ‘தோசை மற்றும் இட்லி’ பாடல் சர்ச்சை கடந்த காலத்திலும் நடந்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டும், ஜிதேஷ் சர்மா இந்தப் பாடலைப் பாடியபோது, ​​சிஎஸ்கே ரசிகர்கள் கொதிப்படைந்தனர். கடந்த 2026ம் ஆண்டு, ஜிதேஷ் சர்மா இந்தப் பாடலைப் பாடும் வீடியோவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே வெளியிட்டது. அது அந்த நேரத்தில் ஒரு விவாதப் பொருளாக இருந்தது. ஆனால் இந்த முறை, ஒரு அதிகாரப்பூர்வ போட்டியின் போது மைதான டிஜே இதைப் பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ALSO READ: RCB புள்ளிகள் பட்டியலில் முதலிடம்.. MI, KKR பரிதாபம்.. CSK முன்னேற்றமா?

ஐபிஎல் அளித்த பதில்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அளித்த புகாரை ஐபிஎல் நிர்வாகக் குழு ஏற்கனவே கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐபிஎல் அதிகாரி ஒருவர், ”சிஎஸ்கேவிடமிருந்து எங்களுக்குப் புகார் வந்துள்ளது. நாங்கள் அது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

Follow Us