AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவில் அடுத்தடுத்து அதிரடி மாற்றம்.. மேலும் 27 புதிய மாவட்ட அமைப்புகள் உருவாக்கம்.. புதிய மா.செக்கள் நியமனம்!!

தமிழக வெற்றி கழகத்தில் கட்சி அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் 27 புதிய மாவட்ட அமைப்புகளை உருவாக்கி, புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சித் தலைவர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிதாக இணைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்குப் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

தவெகவில் அடுத்தடுத்து அதிரடி மாற்றம்.. மேலும் 27 புதிய மாவட்ட அமைப்புகள் உருவாக்கம்.. புதிய மா.செக்கள் நியமனம்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 Aug 2026 07:24 AM IST

சென்னை, ஆகஸ்ட் 09: தமிழக அரசியலில் வளர்ந்து வரும் முக்கிய சக்தியான தமிழக வெற்றிக் கழகம், தனது உட்கட்சி கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும் அடிமட்ட அளவில் அமைப்புகளைப் பலப்படுத்துவதிலும் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மாவட்ட ரீதியாகக் கட்சி அமைப்புகளை மறுசீரமைக்கவும் மாற்றி அமைக்கவும் கட்சித் தலைமை திட்டமிட்டிருந்தது.

முன்னதாக நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்திலேயே இது தொடர்பான ஆலோசனைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு, முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 27 புதிய மாவட்ட அமைப்புகளை உருவாக்கி, அவற்றுக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து கட்சியின் தலைவர் விஜய் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு குற்றவாளி சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.. தவாக வேல்முருகன்!

மாவட்டக் கட்டமைப்பு மாற்றம் மற்றும் பின்னணி:

தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்ட ஆரம்பக் கட்டத்தில், மாநிலம் முழுவதும் மொத்தம் 131 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். அப்போது சராசரியாக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கணக்கில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களும், புதிதாகக் கட்சியில் இணைந்த தலைவர்களும் தங்களுக்கு தனித்தனியாக மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

தங்கள் தொகுதிகளில் சுயேச்சையாகவும் தீவிரமாகவும் செயல்பட்டு, கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவதற்கு இத்தகைய பொறுப்புகள் மிக அவசியமாக இருக்கும் என அவர்கள் வலியுறுத்தினர். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தவெக தலைவர் விஜய், தற்போது கூடுதலாக 27 புதிய மாவட்ட அமைப்புகளை உருவாக்கி புதிய நியமனங்களை அறிவித்துள்ளார்.

முக்கிய நிர்வாகிகளின் நியமன விவரங்கள்:

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட அமைப்புகளுக்கு, தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அண்மையில் கட்சியில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தவெகவில் இணைவதற்காகத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த மரகதம் குமரவேலுக்கு ஏற்கனவே கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அவரது கணவர் தையூர் குமரவேலுக்கு, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு, அவர் திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள காமாட்சிக்கு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான அருள் பிரகாசமுக்கு, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தவெகவில் இணைந்த முன்னணி தலைவர்களில் ஒருவரான சி. விஜயபாஸ்கருக்கு, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் கீர்த்தனா, ஸ்ரீநாத்துக்கு பொறுப்பு:

திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்து திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற நாவல்பட்டு விஜி என்பவருக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் முக்கிய நிர்வாகிகளான கீர்த்தனா மற்றும் ஸ்ரீநாத் ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் வழங்கி நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: தொகுதி மறுசீரமைப்பு.. முதல்வர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடக்கம்! திமுக- அதிமுக புறக்கணிப்பு!

கட்சியின் இந்த மாவட்டக் கட்டமைப்பு விரிவாக்க நடவடிக்கை, தமிழக வெற்றி கழகத்தை அடித்தள அளவிலும் மாநில அளவிலும் மேலும் பலப்படுத்தும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow Us