AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விளையாட்டு வீரர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஊக்கத்தொகை, விமான கட்டணம்…. – ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

Quarterly Incentives for Athletes : விளையாட்டு வீரர்களுக்கான ரயில் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், தமிழ்நாடு அணிக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் வீரர்களுக்கு விமானக் கட்டணத்தை அரசே செலுத்தும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விளையாட்டு வீரர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஊக்கத்தொகை, விமான கட்டணம்…. – ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Nov 2026 20:50 PM IST

சென்னை, நவம்பர் 15 : விளையாட்டு வீரரர்கள் 1,100 பேருக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் வருகிற நவம்பர் 19, 2026 அன்று முதல் விளையாடடு வீரர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna) தெரிவித்தார். மேலும் விளையாட்டுத் துறையில் போக்சோ வழக்குகள் அதிகரிப்பதற்கு போலி பயிற்சியாளர்களே காரணம் எனவும் பேசினார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விளையாட்டு வீரர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஊக்கத்தொகை

சென்னையில் நவம்பர் 15, 2026 இன்று நடைபெற்ற தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது, அமைச்சர் ஆன பிறகு முதன்முறையாக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். நானும் ஒரு விளையாட்டு வீரர் என்ற முறையில் விளையாட்டு சங்கமும், அரசும் இணைந்து செயல்பட்டது கிடையாது. ஆனால் அது எல்லாம் மாறியிருக்கிறது என்றார்.

இதையும் படிக்க : திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – வெள்ளி வாகனங்களில் சண்டிகேஸ்வரர் வீதியுலா!

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் மாவட்ட அளவில், மாநில அளவில் உள்ள பிரச்னைகள் பற்றி பேசி உள்ளோம். அரசு சார்பாகவும் ஒரு சில கோரிக்கைகள் உள்ளது. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திற்கு அலுவலகம் இல்லை. அதை கட்டும் பணிகள் குறித்து ஆலோசித்து உள்ளோம். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவில் நடக்கும் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், விளையாட்டு சங்கங்கள் சார்பாக நடைபெறும் போட்டிகளுக்கு நேரு விளையாட்டு அரங்கில் கட்டணம் இனி வசூலிக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களுக்கு விமானக் கட்டணம், காப்பீடு

மேலும், விளையாட்டு வீரர்களுக்கான ரயில் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், தமிழ்நாடு அணிக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் வீரர்களுக்கு விமானக் கட்டணத்தை அரசே செலுத்தும். கடந்த காலத்தில் முன்பதிவு இல்லா ரயில்களில் சென்றார்கள் வீரர்கள். அது மூன்று நாட்கள் கூட ஆகும். அது எல்லாம் மாறி உள்ளது. அதைப் போல தமிழ்நாடு அணிக்காக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு அணியும் ஜெர்ஸியில் இருந்து உபகரணங்கள் என அனைத்தும் SDAT கொடுக்கும்.

விளையாட்டு வீரர்களுக்கு அடிபடும் போது அதற்கு Insurance கொடுக்கப்படவுள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.இது அனைத்தும் விளையாட்டு வீரர்களின் கோரிக்கையாக இருந்தது. அதை நிறைவேற்றி வருகிறோம். மாவட்ட அளவில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து உள்ளனர். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கான விடுதி தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வெற்றி பெற்றதால் தான் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற முடியும் என்றார்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: நவம்பர் 18, 19 தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் – ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம் – எங்கெல்லாம் மழை?

மேலும் பேசிய அவர், 1,100 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை நவம்பர் 15, 2026 இன்று வழங்கப்படவுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில், தேசிய அளவில் விளையாடிய வீரர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ஊக்கத்தொகை வழங்க உள்ளோம் என தெரிவித்தார்.

Follow Us