AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாணவர்களைச் சந்திக்கும் முதல்வர் விஜய் – தவெகவின் 2-ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!

TVK Education Awards Ceremony : தவெக சார்பில் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நவம்பர் 18, 2026 அன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

மாணவர்களைச் சந்திக்கும் முதல்வர் விஜய் – தவெகவின் 2-ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!
கோப்பு புகைப்ப்டம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Nov 2026 16:58 PM IST

சென்னை, நவம்பர் 15 : தவெக சார்பில் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நவம்பர் 18, 2026 அன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட 2023 ஆம் ஆண்டில் இருந்து சட்டமன்ற தொகுதிய வாரியாக 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் விஜய் (CM Vijay) விருது வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வரான விஜய் தலைமையில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

மாணவர்களைச் சந்திக்கும் முதல்வர் விஜய்

முதற்கட்டமாக கடந்த நவம்பர் 4, 2026 அன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த முக்கியமான கல்வி விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் முதற்கட்டமாக இந்த விழாவில் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார். அத்துடன், மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தவெக சார்பில் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா, வரும் நவம்பர் 18, 2026 புதன்கிழமை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சம்மந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை பேருந்துகளில் சென்னைக்கு பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க : புது வீடோ, கடையோ கட்டுவோர் கவனத்திற்கு.. தனியார் இன்ஜினியர்கள் மூலம் திட்ட அனுமதி பெறலாம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

3 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா எப்போது?

மேலும், தவெகவின் மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா, வரும் நவ.27- ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே தவெகவின் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சியமைந்துள்ளது. இதன் காரணமாகவே கல்வி விருது வழங்கும் விழா தாமதமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் கல்வி விருது வழங்கும் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்கள்.. சுய உதவிக்குழு பெண்களை தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தற்காக மாவட்ட ரீதியாக தவெக நிர்வாகிகளுடன் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, மாணவர்களைச் சென்னைக்கு அழைத்து வருவது மற்றும் விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பது குறித்தான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் முதல்வர் விஜய் முன்னெடுக்கும் இந்தத் கல்வி விருது வழங்கும் விழா, அரசியல் வட்டாரத்திலும் மாணவர்களிடையேயும் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us