IND vs NZ: பவுலிங்கில் இந்திய அணி பக்கா மாஸ்.. நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!
New Zealand vs India 5th ODI: இந்தியா - நியூசிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான (IND vs NZ) 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 42.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 187 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதன்மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தில் இந்தியா (Indian Cricket Team) ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இதற்கு முன்பு 2018-19ம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றிருந்தது. அதேநேரத்தில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.
ALSO READ: இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட்.. முக்கிய பந்துவீச்சாளரை நீக்கிய பிசிசிஐ.. ஏன் தெரியுமா?
போட்டியில் நடந்தது என்ன..?
டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த இந்தியா, 209 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 7 ரன்களிலும், விராட் கோலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற பேட்ஸ்மேன்களும் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும், விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் இஷான் கிஷன் மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் தலா 46 ரன்கள் எடுத்து இந்திய அணியின் கௌரவத்தை காப்பாற்றினார். கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய அர்ஷ்தீப் சிங் 4 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 14 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 209 ரன்களை எடுத்தது.




பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து, ஒரு கட்டத்தில் 82 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. நியூசிலாந்து அணி எளிதாகப் போட்டியை வென்று தொடரை 2-2 என சமன் செய்துவிடும் என்று தோன்றியது, ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். நியூசிலாந்து அணி 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐந்தாவது ஒருநாள் போட்டியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ALSO READ: நியூசி.,க்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி.. 209 ரன்களில் இந்தியா சுருண்டது..
இந்தியாவின் வெற்றிக்கு அர்ஷ்தீப் சிங்கும் முகமது சிராஜும் நாயகர்களாகத் திகழ்ந்தனர். அர்ஷ்தீப் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அர்ஷ்தீப் தனி ஒருவராக நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான வில் யங் (22 ரன்கள்), கிறிஸ்டியன் (16 ரன்கள்) மற்றும் நிக் கெல்லி (24 ரன்கள்) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். சிராஜ், ஃபின் ஆலன் (01) மற்றும் டிம் சீஃபர்ட் (14 ரன்கள்) ஆகியோரையும் பெவிலியனுக்கு அனுப்பினார். அக்சர் படேல் 2 விக்கெட்களையும், ஆகிப் நபி, யாஷ் தாக்கூர் மற்றும் நமன் தீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.