AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: இந்திய அணியை ஆட்டம் காண வைத்த மேட் ஹென்றி.. ஸ்பெஷல் கிப்ட் கொடுத்த விராட் கோலி!

Virat Kohli Special Gift: பே ஓவலில் நடந்த இந்தியா-நியூசிலாந்து 4வது ஒருநாள் போட்டியில், மேட் ஹென்றி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலையச் செய்தார். முதல் ஓவரிலேயே ரோஹித், கோலி, ஷ்ரேயாஸ் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்தியா 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 244 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை வென்ற ஹென்றியை, விராட் கோலி ஜெர்சி பரிசளித்து பாராட்டினார்.

IND vs NZ: இந்திய அணியை ஆட்டம் காண வைத்த மேட் ஹென்றி.. ஸ்பெஷல் கிப்ட் கொடுத்த விராட் கோலி!
விராட் கோலிImage Source: PTI and AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Nov 2026 20:32 PM IST

பே ஓவலில் நடந்த இந்தியாவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி அற்புதமாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹென்றியின் பந்துவீச்சில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா, விராட் கோலி (Virat Kohli) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்பட 3 நட்சத்திர பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணிக்கு (Indian Cricket Team) அழுத்தம் கொடுத்தார். இதில், விராட் கோலியின் விக்கெட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. பந்து பவுன்ஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் உள்ளே எகிறி போல்டை தாக்கியது. விக்கெட் வீழ்ந்த பிறகு விராட் கோலி முற்றிலும் ஷாக் அடைந்து வெளியேறினார்.

ALSO READ: 89 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்திய அணிக்கு குவிந்த மோசமான சாதனைகள்!

முதல் ஓவரில் 3 விக்கெட்கள்:

முன்னதாக, மேட் ஹென்றி முதல் பந்திலேயே ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்க செய்தார். 5வது பந்தில் கோலியை ஆட்டமிழக்கச் செய்த பிறகு, கடைசிப் பந்தில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தின் வெற்றிக்குப் பிறகு விராட் கோலி நியூசிலாந்து அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியை நியூசிலாந்து அணி தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்தது. அதில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, மேட் ஹென்றிக்கு கையெழுத்திட்ட ஜெர்சியைப் பரிசளித்ததுடன், அவரது பந்துவீச்சையும் பாராட்டினார்.

ஆட்ட நாயகன் விருதை வென்ற ஹென்றி:

 

View this post on Instagram

 

A post shared by BLACKCAPS (@blackcapsnz)


இந்தியாவிற்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் மேட் ஹென்றிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் ஹென்றி 9.4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது ஸ்விங் பந்துவீச்சால் இந்தியா 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து 244 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஒருநாள் போட்டிகளில் ரன் வித்தியாசத்தில் இந்தியா சந்தித்த 2வது மிகப்பெரிய தோல்வியாகும். தற்போது இந்தியா தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. நியூசிலாந்தால் தொடரை வெல்ல முடியாது. ஆனால், இந்திய அணியை 5வது மற்றும்  இறுதிப் போட்டியில் வீழ்த்தி வெற்றி பெற்று ஆட்டத்தை சமநிலையில் வைத்திருக்க முடியும்.

ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி:

2026 நவம்பர் 13ம் தேதியான இன்று மவுண்ட் மவுங்கானுய் ஸ்டேடியத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்திடம் 244 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும், 333 ரன்களை எடுத்தது. இந்தியா பேட்டிங் செய்ய வந்தபோது, ​​விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

ALSO READ: ரோஹித், கோலி இதை கற்றுக்கொள்ள வேண்டும்.. காம்பீர் பேச்சால் பரபரப்பு!

தொடக்க ஆட்டக்காரர்களின் இந்தச் சரிவு இந்திய அணிக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் இன்னும் முன்னிலையில் இருந்தாலும், இந்தப் படுதோல்வி பல முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியா உலகின் நம்பர் ஒன் ஒருநாள் அணியாக இருக்கும் நிலையில், 244 ரன்கள் வித்தியாசத்தில் ஏற்பட்ட இந்தப் பெரிய தோல்வி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

Follow Us