IND vs NZ: ரோஹித், கோலி இதை கற்றுக்கொள்ள வேண்டும்.. காம்பீர் பேச்சால் பரபரப்பு!
Gambhir Slams India Batting Line Up: நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் மோசமான தோல்வி குறித்து தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்தார். மேட் ஹென்றியின் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தவறிய இந்திய பேட்ஸ்மேன்களை கடுமையாக சாடிய அவர், 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கவலை அளிப்பதாகக் கூறினார்.
நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் (IND vs NZ) போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து, இந்திய அணியின் (Indian Cricket Team) தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் விளக்கம் அளித்துள்ளார். நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியைப் பாராட்டிய அதே வேளையில், காம்பீர் இந்திய பேட்ஸ்மேன்களைக் கடுமையாகச் சாடினார். பே ஓவலில் நடந்த நான்காவது போட்டியில் இந்தியா 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 334 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்தியா, முதல் ஓவரிலேயே அனுபவ வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர்.
ALSO READ: நியூசிலாந்து அணி அபாரம்.. 4வது ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா!




இந்திய அணி மொத்தமாக 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் 6வது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இது (ரன்கள் அடிப்படையில்) இந்தியாவின் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாகும். மேட் ஹென்றி சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கௌதம் காம்பீர் பேட்ஸ்மேன்களைக் கடுமையாகச் சாடி, பந்துவீச்சாளர்கள் நல்ல இடங்களில் பந்துவீசினார்கள், ஆனால் அதைச் சமாளிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
காம்பீர் என்ன சொன்னார்..?
🔴ROHIT & VIRAT NEED TO LEARN HOW TO HANDLE THESE KIND OF BOWLING? 🤯
Gautam Gambhir🎙️: Matt Henry kept attacking the stumps, got Rohit caught in the slips and beat Virat and Shreyas on the inside edge. He believes Indian batters need to learn how to handle this kind of bowling. https://t.co/AzLX43PyfX
— Sam (@cricsam02) November 13, 2026
இந்திய அணியின் மோசமான தோல்வி குறித்து பேசிய கௌதம் காம்பீர், “ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இத்தகைய பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாத பந்து என்று எதுவும் இல்லை. மேட் ஹென்றி நல்ல இடங்களில் பந்து வீசினார், ஆனால் அதைச் சமாளிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சுமார் 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும்போது, அது கவலைக்குரிய விஷயமாகும். இந்த நிலைமைகள் உலகக் கோப்பைக்கு மிகவும் நெருக்கமாக உள்ளன. கடந்த போட்டியிலும் நாங்கள் 7 விக்கெட்டுகளை இழந்தோம், அதுவும் கவலைக்குரிய விஷயமாகும்,” என்று கௌதம் காம்பீர் கூறினார்.
ALSO READ: உலகக் கோப்பைக்கு பிறகும் கோலி விளையாடுவாரா..? பயிற்சியாளர் கொடுத்த இன்ப செய்தி!
இந்திய அணியின் மோசமான பீல்டிங்
வில் யங் 125 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார். இருப்பினும், ரோஹித் சர்மா அந்த கேட்சைத் தவறவிட்டிருக்காவிட்டால், அவரது விக்கெட் முன்னதாகவே வீழ்ந்திருக்கும். இரண்டாவது ஓவரின் 5வது பந்தில், யங் வெறும் 5 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது இது நிகழ்ந்தது. அடுத்த பந்திலேயே விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் ஒரு கேட்சைத் தவறவிட்டார். இதுகுறித்து கௌதம் காம்பீர் கூறுகையில், “ஆகிப் நபிக்கு துரதிர்ஷ்டம். வில் யங்கின் விக்கெட்டை நாம் எடுத்திருந்தால், நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். அதன்பிறகு, என்ன செய்திருக்கலாம் என்று ஒருவர் எப்போதும் யோசிப்பார். நாங்கள் கேட்சுகளைத் தவறவிட்டோம், அதன் விளைவுகளை நாங்கள் அனுபவிக்கத்தான் வேண்டும்,” என்றார்.