IND U19 vs PAK U19: இந்தியா U19 – பாகிஸ்தான் U19 பைனல் 2026: எப்போது, எங்கே பார்க்கலாம்? நேரலை விவரங்கள் இதோ!
India vs Pakistan U19 Asia Cup Final: 2026ம் ஆண்டுக்கான U19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. நவம்பர் 14 அன்று ஓமானில் நடைபெறும் இந்தப் போட்டி, சோனி லிவ்-வில் நேரலையாகக் காணலாம். லீக் சுற்றில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்க இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பு உள்ளது.
2026ம் ஆண்டுக்கான ஆண்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தொடர் (ACC Men’s U19 Asia Cup 2026) அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவும் (IND U19 Team) பாகிஸ்தானும் மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி வருகின்ற 2026 நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும். இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதற்கிடையில், முதல் அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தது. தற்போது இரு அணிகளும் ஆசியக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.
ALSO READ: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா U19.. பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்..!
இந்தியா-பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி எப்போது, எங்கு நடைபெறும்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2026ம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி வருகின்ற 2026 நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும். இந்தப் போட்டி, ஓமானின் அல் அமெராத் நகரில் உள்ள அல் அமெராத் கிரிக்கெட் மைதானத்தில் (மினிஸ்ட்ரி டர்ஃப்-2) நடைபெறும். இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்கும், டாஸ் காலை 10:00 மணிக்கு நடைபெறும்.




இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?
இந்தியா – பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 2026 இறுதிப் போட்டியின் ஆன்லைன் நேரலை, சோனி லிவ் (SonyLIV) செயலி மற்றும் இணையதளத்தில் கிடைக்கும். பார்வையாளர்கள் இந்தப் போட்டியை மொபைல் போன்கள், லேப்டாப் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களில் நேரலையாகக் காணலாம்.
இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது எப்படி..?
அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. இதற்குப் பதிலளித்த கேப்டன் லக்ஷ்யா 90 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். ஆர்யவீர் சேவாக் 57 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 117 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்தனர். பின்னர், வி.கே. வினீத் 61 பந்துகளில் அரைசதம் அடித்து இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினார். இந்திய அணி 36.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது.
பாகிஸ்தான் அணியின் பைனல் பாதை:
இதற்கிடையில், முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்ட அணி, வங்கதேசத்தை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான், ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தது.
ALSO READ: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
லீக் சுற்றிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான், இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. எனவே, இறுதிப் போட்டியில் தங்களது முந்தைய தோல்விக்குப் பழிவாங்க இந்திய வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.