AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND U19 vs AFG U19: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா U19.. பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்..!

Afghanistan U19 vs India U19 Semi Final 2: இந்தியா U19 மற்றும் ஆப்கானிஸ்தான் U19 இடையிலான U19 ஆண்கள் ஆசியக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இந்திய U19 அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

IND U19 vs AFG U19: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா U19.. பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்..!
இந்திய U19 அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 12 Nov 2026 17:43 PM IST

இந்தியா U19 மற்றும் ஆப்கானிஸ்தான் U19 இடையிலான (IND U19 vs AFG U19) ஆசியக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தநிலையில், வருகின்ற 2026 நவம்பர் 15ம் தேதி இந்திய அணி (Indian Cricket Team), பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மோதுகிறது. முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களில், நொமான் சலார்சாய் மற்றும் ஷா ஃபைசல் ரஹிமி தலா ஒரு சதம் அடித்தனர். கேப்டன் சோஹைல் கான் 36 ரன்கள் எடுத்து சிறப்பாகச் செயல்பட்டார். இந்திய பந்துவீச்சாளர்களில், இஷான் சூட் மூன்று விக்கெட்டுகளையும், ஆர்யன் சவசானி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். காவ்யா படேல், யஷ்பர்தன் சௌகான் மற்றும் அர்ஜுன் ராஜ்புத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ALSO READ: U19 ஆசிய கோப்பை கிரிக்கெட்.. இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி:

228 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்தியா, தொடக்கத்திலிருந்தே ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்தியது. கேப்டன் லக்ஷ்ய ராஜேஷ் 90 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 93 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஆர்யவீர் சேவாக்கும் 51 ரன்கள் எடுத்து சிறப்பாகச் செயல்பட்டார். அவருக்குப் பிறகு களமிறங்கிய வி.கே. வினீத் 62 பந்துகளில் 57 ரன்களும், யஷ்பர்தன் சௌகான் 16 ரன்களும் எடுக்க, இந்தியா 36.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ALSO READ: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டி எப்போது?

2026-ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே வருகின்ற 2026 நவம்பர் 14ம் தேதி அல் அமெராத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்குத் தொடங்கும்.

Follow Us