தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? எதற்கும் நாங்கள் தயார்.. கே.ஏ.செங்கோட்டையன்!
Minister K.A. Sengottaiyan Latest Pressmeet : தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகளிடம் திட்டமில்லை என்றும் ஒருவேளை வந்தால் எதிர் கொள்ள தயார் என்றும் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார் .
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சி பகுதியில் சந்தை வளாகம், புதிய சமுதாய கூடத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்த எண்ணங்கள் இல்லை. ஒருவேளை, நம்பிக்கை எல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தவெக அரசு தயாராக உள்ளது. பேரூராட்சிகளுக்கான பதவிக்காலம் 2027- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ளது. அதற்குப் பிறகு அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு இயக்கங்களும் ஆட்சிக்கு வரும்போது, எம்எல்ஏகளை அழைத்து என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வது வழக்கம் ஆகும்.
வெக எம்எல்ஏக்கள் கூட்டம்
அதன்படியே, மாமல்லபுரத்தில் நேற்று புதன்கிழமை முதல்- அமைச்சர் சப் விஜய் தலைமையில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தவெக எம்எல்ஏக்களும் எந்த கடிதங்களும் வாய்ப்பில்லை. தீபாவளி பண்டிகை நாளில் நிகழ்ந்த பல்வேறு கொலை சம்பவங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள முன்விரோதம் மற்றும் மனக்கசப்பு காரணமாகவே நிகழ்ந்துள்ளது. இதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வளர்ந்து வரும் கிராமம் மற்றும் நகரத்தில் வாழும் மக்களாக இருந்தாலும்.
மேலும் படிக்க: கன்னியாகுமரியில் களமிறங்கிய அதிநவீன படகு.. ஒரே நேரத்தில் 150 பேர் பயணம்.. முழு விவரம் உள்ளே!




கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம்
தீபாவளி பண்டிகை என்பது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் நிகழ்வாகும். ஓரிரு இடங்களில் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மக்கள் மத்தியில் பொறுமை இருப்பதுடன் பொறாமை உணர்வு இல்லாமல் இருத்தல் வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு அந்த தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
அதற்கு, உரிய விளக்கத்தை முதல்- அமைச்சர் ஜோசப் விஜயிடம், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் அளித்துள்ளார் என்று தெரிவித்தார். தமிழக வெற்றுக் கழகத்தின் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பக்ருதீன் என்பவரிடம் அதிமுக நிர்வாகி ஒருவர் ரூ. 30 கோடி தருவதாகவும், தவெக அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று குதிரை பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இதனால், தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக பேசப்படும் நிலையில் செங்கோட்டையன் இத்தகைய பதிலை அளித்துள்ளார்.
மேலும் படிக்க: ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரம்.. துப்பாக்கியால் சுட்டு தள்ளியிருப்பேன்.. பொங்கியெழுந்த ஜெயக்குமார்!