சிறுமியை வாயை பொத்தி கடத்தி.. மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. திருப்பூரில் பகீர் சம்பவம்!
Tiruppur Girl Abducting And Harassed : திருப்பூர் மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற 12 வயது சிறுமியை வாயை பொத்தி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் 12 வயது சிறுமி. இவர், நேற்று புதன்கிழமை ( நவம்பர் 11- ஆம் தேதி) அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அம்மிக்கல் விற்பனை தொழிலாளியான விஷ்ணு ( 26 வயது) என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென, அந்த சிறுமியின் வாயை பொத்தி அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றார். அந்த சிறுமி சத்தம் போட்டும் அந்த சாலையில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் அவரை காப்பாற்ற யாரும் வரவில்லை.
சிறுமியை கடத்தி மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை
அத்துடன் இரவு நேரம் என்பதால் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் இந்தக் கடத்தல் சம்பவம் எளிதாக நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த சிறுமியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு இளைஞர் விஷ்ணு கடத்தி சென்று சிறுமிக்கு மயக்கம் மருந்து கொடுத்துள்ளார். இதனால், சிறிது நேரத்தில் அந்த சிறுமி மயங்கிய நிலையில், அதனை சாதகமாக பயன்படுத்திய தொழிலாளி விஷ்ணு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து, அந்த சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
மேலும் படிக்க: புதுச்சேரியில் பிறந்தநாள் பார்ட்டிக்கு திட்டம்.. ஈ.சி.ஆரில் பறந்த கார்.. தடுப்பு கம்பியில் மோதி விபத்து.. 6 மாணவர்கள் பலத்த காயம்!




அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்
இந்த சம்பவத்தில் மயக்கம் அடைந்த அந்த சிறுமி நிறம் கழித்து கண் விழித்த நிலையில் அங்கு இருந்து உடனடியாக வீட்டுக்கு தப்பி சென்றார். அங்கு, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சிறுமியின் அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதை அறிந்த இளைஞர் விஷ்ணு அங்கிருந்து தப்பி சென்றார். உடனே, போலீசார் விரட்டி சென்ற போது கீழே விழுந்ததில் விஷ்ணுவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
போக்சோ, கடத்தல் சட்டத்தின் கீழ் கைது
இதைத் தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும், அவர் மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக, காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை.. கணவர் கைது.. நிர்கதியான 3 குழந்தைகள்!