AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா கிடையாது; ரியல் ஆக்‌ஷன் எடுத்து காட்டுங்கள் – முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் காட்டம்!

MK Stalin Slams CM Vijay: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், “‘தவறு செய்தால் விடமாட்டேன்’ என முதலமைச்சர் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார் என Damage Control-க்காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை Plant செய்திருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.

பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா கிடையாது; ரியல் ஆக்‌ஷன் எடுத்து காட்டுங்கள் – முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் காட்டம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Nov 2026 15:10 PM IST

நவம்பர் 12, 2026: கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா கிடையாது என்றும், முதலமைச்சர் விஜய் தனது கண்டிப்பைச் செயல்பாட்டில் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. பெண் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

மேலும் படிக்க: “நிர்வாக குளறுபடியில் சென்னையில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்”.. தவெக அரசு மீது பாய்ந்த இபிஎஸ்!!

எம்.எல்.ஏ.வை தனியாக அழைத்து கண்டித்த விஜய்?

இதற்கிடையே, சென்னையில் நேற்று தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை தனியாக அழைத்து முதலமைச்சர் கண்டித்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், கண்டிப்புடன் மட்டும் நிறுத்தாமல் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவை துணைத் தலைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

 ‘பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா கிடையாது’


இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், “‘தவறு செய்தால் விடமாட்டேன்’ என முதலமைச்சர் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார் என Damage Control-க்காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை Plant செய்திருக்கிறார்கள்.

முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.  கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க: ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரம்.. துப்பாக்கியால் சுட்டு தள்ளியிருப்பேன்.. பொங்கியெழுந்த ஜெயக்குமார்!

ஆனால், ‘Strict Officer’ செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு Strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!” என்று மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

Follow Us