AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உண்மையிலேயே அபாரம்… சூர்யாவின் சீன் படத்தை பாராட்டி பேசிய கௌதம் ராம் கார்த்திக்!

Actor Gautham Ram Karthik Praised Scene Movie | தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கௌதம் ராம் கார்த்திக். இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் சீன் படத்தைப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உண்மையிலேயே அபாரம்… சூர்யாவின் சீன் படத்தை பாராட்டி பேசிய கௌதம் ராம் கார்த்திக்!
கௌதம் ராம் கார்த்திக்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Nov 2026 15:07 PM IST

தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக அறிமுகம் ஆகி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் (Gautham Ram Karthik). இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கவில்லை. அந்தப் படங்கள் குறிப்பிட்ட சமூகத்தினரை உயர்த்தி பேசும் ஒன்றாக இருந்ததே அதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை பிற்காலத்தில் உணர்ந்து தனது படங்களின் கதைகளை தேர்வு செய்வது தொடர்பான விசயங்களில் அதிக அளவில் கவனத்தை செலுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சமீபத்தில் பேட்டியிலும் அவர் பேசி இருந்தது குறிப்பிடத்தகக்து. இந்த நிலையில் தற்போது தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் கௌதம் ராம் கார்த்திக்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் சீன். இந்தப் படத்தை பிரபலங்கள் பலர் பார்த்துவிட்டு தங்களது பாராட்டை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தனது எக்ஸ் தள பக்கத்தில் சீன் படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டி உள்ளார்.

சூர்யாவின் சீன் படத்தை பாராட்டி பேசிய கௌதம் ராம் கார்த்திக்:

அந்த எக்ஸ் தள பதிவில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசியதாவது, சீன் படம் மிகவும் பிடித்தது. சூர்யா சார், உங்கள் அணுகுமுறை, ஸ்டைல், வசீகரம், நடிப்பின் பன்முகத்தன்மை என அனைத்தும் உங்கள் கதாபாத்திரத்தைப் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றியது. அற்புதம்! முழு நடிகர்களும் படக்குழுவினரும் இந்தப் படத்தை உண்மையிலேயே பிரமாதமாக உருவாக்கியுள்ளனர்! என்று அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஓம் படத்தில் மம்முட்டி – சாய் பல்லவியை தேர்ந்தெடுக்க காரணம் அதுதான் – ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!

கௌதம் ராம் கார்த்திக் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… இஞ்சி வெல்லம் படத்தில் விஜய் சேதுபதிக்கு இத்தனை தோற்றங்களா? வைரலாகும் தகவல்

Follow Us