AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இறுதி செய்யப்படும் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்

Irandu Vaanam Movie Release Update | நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இரண்டு வானம். இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இறுதி செய்யப்படும் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்
இரண்டு வானம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Nov 2026 12:12 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal). இவர் நாயகனாக அறிமுகம் ஆன வெண்ணிலா கபாடிகுழு படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் படங்களை தயாரித்தும் வருகிறார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது போல தயாரிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கட்டா குஸ்தி 2.

இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடியே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இந்த இரண்டாம் பாகமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக உருவாக உள்ள படம் இரண்டு வானம். இந்தப் படத்தினை இயக்குநர் ராம் குமார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி செய்யப்படும் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ்?

முன்னதாக இந்த இரண்டு வானம் படத்தின் வெளியீடு இரண்டு முறை அறிவிக்கப்பட்டு பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, இரண்டு வானம் திரைப்படம் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இயக்குனர் ராம் குமார் இயக்கியுள்ள இப்படம் மிகச் சிறந்த படைப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக இந்தக் கதையை எழுதி வந்த இயக்குனர், இந்த காதல் கதையைத் தனது அடுத்த திரைப்படமாக உருவாக்க விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… சீன் படத்தை வெகுவாகப் பாராட்டிய மகேஷ் பாபு… நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா – வைரலாகும் எக்ஸ் தள பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் நடிப்பில் பேக் டூ பேக் வெளியாக காத்திருக்கும் படங்கள் என்னென்ன தெரியுமா?

Follow Us