AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Vishnu Vishal: விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் இரண்டு வானம் படம் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு!

Irandu Vaanam Release Postponed: தமிழில் மக்கள் மனதில் நெருக்கமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் தமிழில் இந்த 2026ம் ஆண்டு அக்டோபரில் வெளியாக காத்திருந்த படம்தான் இரண்டு வானம். இப்படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Vishnu Vishal: விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் இரண்டு வானம் படம் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு!
இரண்டு வானம் படம் ஒத்திவைப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Oct 2026 18:52 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் படங்களை தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 31ம் தேதியில் இந்த திரைப்படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படமும் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு முன்னே இயக்குநர் ராம் குமார் (Ram Kumar) இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துவந்த திரைப்படம்தான் இரண்டு வானம் (Irandu Vaanam).

இந்த படமானது பீல் குட் காதல் கதையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியில் வெளியாகுவதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: வேட்டுவம் படத்தில் கேமியோ வேடத்தில் பிரபல நடிகை.. அட இவரா?

இரண்டு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அந்த பதிவில் படக்குழு, இரண்டு வானம் படம் மீதும், அது பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கும் தனித்துவமான சினிமா அனுபவத்தின் மீதும் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தை மிகப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதையும், சிறந்த திரையரங்கு அனுபவத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, முன்பு அறிவிக்கப்பட்ட அக்டோபர் 23 ஆம் தேதிக்கு பதிலாக, மிகவும் சாதகமான ஒரு வெளியீட்டுத் தேதியைத் தேர்வு செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம் என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மமிதா பைஜூ – சங்கீத் பிரதாப் நடிக்கும் ஹலோ டியர் பட ரிலீஸ் எப்போது தெரியுமா?

மேலும் விரைவில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என இந்த அறிவிப்பில் படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது இது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இரண்டு வானம் படம் ஒத்திவைக்க காரணம் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியாகிறது. இந்த படத்தின் மீது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் மீது எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இதற்க்கு முன் மற்றும் பின் வெளியாகவும் படங்களின் வசூல் பாதிக்கும் என கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் 23ம் தேதியில் சிறு சிறு படங்கள் வெளியாகும் நிலையில், அதை காரணமாக கொண்டும் இரண்டு வானம் பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us