Mamitha Baiju: மமிதா பைஜூ – சங்கீத் பிரதாப் நடிக்கும் ஹலோ டியர் பட ரிலீஸ் எப்போது தெரியுமா?
Hello Dear Movie: தென்னிந்திய சினிமாவில் இளம் நட்சத்திர நடிகையாக இருந்துவருபவர் மமிதா பைஜூ. இவர் மலையாளத்தில் நடிகர் சங்கீத் பிரதாப்பிற்கு ஜோடியாக ஹலோ டியர் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு பகிர்ந்துள்ளது.
மலையாளம் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர்தான் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் தொடந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக தமிழில் சூர்யாவுக்கு (Suriya) ஜோடியாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான நிலையில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் மமிதா பைஜூ மலையாளத்தில் புதிய படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாகியிருந்தார். பிரேமலு (Premalu) படத்தில் நஸ்லெனின் நண்பனாக நடித்திருந்த சங்கீத் பிரதாப் (Sangeeth Prathap) ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவர் நடிகையாக நடித்துவந்தார். இந்த படத்திற்கு படக்குழு “ஹலோ டியர்” (Hello Dear) என டைட்டில் வைத்துள்ளது.
இப்படத்தின் மூலமாகதான் சங்கீத் பிரதாப் ஹீரோவாக அறிமுகமகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இதன் முதல் பார்வையை படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் எனவும் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் என் கேரக்டர் இப்படிதான் இருக்கும் – நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஓபன் டாக்
மமிதா பைஜூ மற்றும் சங்கீத் பிரதாப்பின் ஹலோ டியர் படத்தின் ரிலீஸ்:
இந்த ஹலோ டியர் படத்தை மலையாள இயக்குனர் டினோய் பால்ஸ் இயக்க, மிகவும் சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மலையாள பிரபல தயாரிப்பாளரான ஆஷிக் உஸ்மான் தயாரித்துவருகிறார். காதல் மற்றும் ரோமெண்டிக் பீல் குட் கதைக்களத்தில் இப்படமானது உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார்.
இதையும் படிங்க: பாக்கெட் நாவெல் படத்தின் ஷூட்டிங் முடிந்தது… விஜய் சேதுபதி வெளியிட்ட பதிவு
இவரின் இசையில் சிறப்பான பாடல்களும் இப்படத்திற்காக உருவாக்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இப்படமானது வரும் 2027ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மமிதா பைஜூ – சங்கீத் பிரதாப்பின் ஹலோ டியர் படம் குறித்த எக்ஸ் பதிவு:
#HelloDear New Poster 📸
Starring #ManithaBaiju & #SangeethPrathap
Directed by Dinoy Paulose
Produced by Ashiq UsmanIn Cinemas Worldwide From January 29, 2027 https://t.co/WnBHawUjuA
— AB George (@AbGeorge_) October 9, 2026
நடிகை மமிதா பைஜூ தற்போது மக்கள் கொண்டாடும் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டடித்திருக்கிறது. முதல்வர் விஜய் முதல் சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து படங்களில் பணியாற்றிவிட்டார். மேலும் பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நாயகியாக நடித்துவருகிறார். இன்னும் இப்படத்தின் டைட்டில் மற்றும் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.