எல்லாம் என்ன வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களால் தான் – ரசிகர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய ரஜினிகாந்த்!
Rajinikanth talks about his fans | நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடைப்பெற்ற ஜெயிலர் 2 படத்தின் விழாவில் பேசிய போது தனது ரசிகர்கள் குறித்து நெகிழ்ந்து பேசியது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அது மட்டும் இன்றி தமிழ் சினிமவில் மட்டும் இன்றி உலக அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
அந்த வகையில் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். அதில் ரஜினிகாந்த் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




எல்லாம் என்ன வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களால் தான்:
76 வயதிலும் நான் எப்படி இன்னும் கதாநாயகன் வேடங்களில் நடிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்கள்தான். நான் வெறும் ஒரு புல்வெளித் துரும்பு மட்டுமே. உங்கள் அன்பும் ஆதரவும்தான் பெரிய தயாரிப்பு நிறுவனங்களை என்னுடன் பணியாற்ற முன்வரச் செய்கின்றன. நெல்சன் போன்ற படைப்பாற்றல் மிக்க இயக்குநர்களை என்னுடன் இணைந்து படங்களை இயக்க வைக்கின்றன. உங்கள் அன்பிற்கு நான் எப்படி கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. உங்கள் பாதங்களில் நான் தலைவணங்குகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Superstar #Rajinikanth about his fans❣️:
“People ask me how I’m still playing hero roles at the age of 76.. Ellam Enna Vaazha Veikum Dheivangalana Tamil Makkal..🙏 I’m just a blade of grass. It’s because of your love and support that big production houses are coming forward to work with me, and creative directors like Nelson are making films with me.. I don’t know how to repay your love.. I bow at your feet..” ❤️🙏
— Laxmi Kanth (@iammoviebuff007) October 10, 2026