ரெட்ரோ ஒரு மொக்கை படம்… டோரதி பட வெற்றி விழாவில் மிஷ்கின்பேச்சு
Director Mysskin talks about Retro movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மிஷ்கின். இவர் டோரதி பட விழாவில் கலந்துகொண்ட போது ரெட்ரோ படம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயகுநராக வலம் வருபவர் இயக்குநர் மிஷ்கின். இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இயக்குநராக மிஷ்கின் இயக்கத்தில் தமிழ் மொழியில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது இயக்கத்தில் பிசாசு 2 மற்றும் ட்ரெயின் என இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தும் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது. அதிலும் குறிப்பாக பிசாசு 2 படம் பல ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் கிடப்பில் கடக்கின்றது. ஒரு பக்கம் இவரது இயக்கத்தில் படங்கள் வெளியாகாமல் இருந்தாலும் மற்றொரு பக்கம் மிஷ்கின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் மிஷ்கின் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள டோரதி படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு மிஷ்கின் பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.




ரெட்ரோ ஒரு மொக்கை படம்… டோரதி வெற்றி விழாவில் மிஷ்கின் பேச்சு:
இதற்கு முன்பு கார்த்திக் சுப்பராஜ் ஒரு படத்தினை இயக்கி இருந்தார் (ரெட்ரோ). அது ஒரு மொக்கையான படம் தான். கார்த்தியின் படங்களில் நான் பார்த்த முதல் படம் அதுதான். அதில் ஒரு நீண்ட நடனக் காட்சி (long take dance) எல்லாம் இருந்தது. உண்மையில் அது மிகவும் மொக்கையாக இருந்தது. அதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கார்த்தியின் படங்கள் நன்றாக இருக்கும் என்று என் உதவியாளர்களே கூடச் சொல்வார்கள். பொதுவாக நான் கடவுளை வேண்டிக்கொள்ளவே திரையரங்கிற்குச் செல்வதுண்டு. இந்தப் படத்திற்காகவும் நான் கடவுளை வேண்டிக்கொண்டேன் என்று பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கருப்பு படத்தின் வெற்றி… ஆர்.ஜே.பாலாஜிக்கு குவியும் வாய்ப்புகள்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Mysskin at #Dorothy Thanks Meet:
“Karthi did a film before this (Retro).. Adhu Oru Mokka padam dhan adhu.. That was my first film i watched karthi’s.. There was a long take dance and all.. Mokkaya Irunchu actually.. I don’t mind saying that.. Even my assistants say that karthi’s films are good.. I usually go to theatre to pray gods.. I prayed gods in this film..” https://t.co/zKFgxEezEh
— Laxmi Kanth (@iammoviebuff007) October 7, 2026
Also Read… சூர்யாவின் சீன் படத்தில் நஸ்லேனின் கேரக்டர் இதுவா? வைரலாகும் தகவல்