AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தள்ளிப்போகிறதா விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்

Appa Kutty has been postponed | நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் அப்பா குட்டி. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

தள்ளிப்போகிறதா விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்
அப்பா குட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Oct 2026 14:25 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விஜய் ஆண்டனி. இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வந்தது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி விஜய் ஆண்டனி தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்களுக்கு இசையமைப்பது மட்டும் இன்றி அந்தப் படங்களை அவரே தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மேலும் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் நூறு சாமி. இளம் வயதிலேயே கணவனை இழக்கும் பெண்களுக்கு மறுமணம் எவ்வளவு அவசியம் என்பது குறித்து இந்தப் படத்தில் வெளிப்படையாக பேசி உள்ளனர். இந்தப் படம் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தள்ளிப்போகிறதா விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ரிலீஸ்?

இந்தப் படத்தை நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துள்ள படம் அப்பா குட்டி. அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கும் என்று படத்தின் போஸ்டரைப் பார்க்கும் போதே தெரிகிறது. இயக்குநர் மு மாறன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்து உள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிம் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் வெளியாவதாக இருந்த நடிகர் தனுஷின் ஓம் படம் ஜெயிலர் 2 படத்தின் வெளியீடு காரண்மாக ஒத்திவைப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் இந்த அப்பா குட்டி படத்தின் வெளியீடும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

Also Read… 8 ஆண்டுகளைக் கடந்தது ராட்சசன் படம்… நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எமோஷ்னல் பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்பொது? அப்டேட் இதோ

Follow Us