AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்பொது? அப்டேட் இதோ

Ranabaali Movie Trailer Release Update | நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ரணபாலி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என்பது குறித்து படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்பொது? அப்டேட் இதோ
ரணபாலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Oct 2026 17:34 PM IST

தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இது மட்டும் இன்றி நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ரணபாலி. இந்தப் படத்தை இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்பொது?

இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகி உள்ள இந்த ரணபாலி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 8-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… ‘பாலியல் வன்முறைக்கு இணையான குற்றம்’ – ஏஐ வீடியோ குறித்து ஜான்வி கபூர் கடும் கண்டனம்

ரணபாலி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… வசூலில் உலக அளவில் ரூ. 150 கோடியை கடந்தது மண்டாட்டி படம்… தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா?

Follow Us