பிக்பாஸில் ஷமாவிற்கு எதிராக கேள்விகளை அடுக்கும் போட்டியாளர்கள்… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 4 வாரங்கள் முடிவடைந்து 5-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று ஷமாவிடம் மற்ற போட்டியாளர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் எழுப்பும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் தற்போது அதிக அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10. இந்த நிகழ்ச்சி தொடங்கி 4 வாரங்கள் முடிவடைந்து தற்போது 5-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருந்த 6 பேரில் குமரன் பணப்பெட்டியுடன் வெளியேறிய நிலையில் மீதம் இருந்த லக்ஷ்மி பிரியா, அஸ்மிதா, ஜாவித், சாவ்வன்யா மற்றும் தன்யா ஆகிய 5 பேரில் எந்த இரண்டு பேர் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறுவார்கள் என்று பார்வையாளர்கள் மட்டும் இன்றி வீட்டில் உள்ள போட்டியாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நடைப்பெற்ற வீக் எண்ட் ஷோவில் ஜாவித் கைகளில் இருந்து கயிர் கழண்டு விழுந்த குறும்படத்தைப் போட்டுக்காட்டி அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர்.
அதனைத் தொடர்ந்து அஸ்மிதா மற்றும் சாவன்யா இடையே போட்டி அதிகமாக நிலவிய நிலையில் அவர்களில் யார் குறைவான வாக்குகள் பெற்றார்களோ அந்த அடிப்படையில் வெளியேற்றப்படும் என்று தெரிவித்து சாவன்யா வெளியேறினார். இதனைத் தொடர்ந்து புதிதாக மூன்று வைல்கார்ட் போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பட்டுள்ளனர். இதனால் இனி ஆட்டத்தோட வியூகம் மாறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




பிக்பாஸில் ஷமாவிற்கு எதிராக கேள்விகளை அடுக்கும் போட்டியாளர்கள்:
இந்த நிலையில் நேற்று ஷமாவிற்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய 29-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஷமாவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புவது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது அவரிடம் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் இருப்பதாலேயே டார்கெட் செய்யப்படுவது போல உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day29 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 5, 2026