AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கேரளாவில் சூர்யாவின் சீன் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வைரலாகும் அப்டேட்

Scene Movie Kerala Release Rights | நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படத்தின் கேரள திரையரங்க ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு திகாரப்பூர்வமாக தற்போது அறிவித்து உள்ளது.

கேரளாவில் சூர்யாவின் சீன் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வைரலாகும் அப்டேட்
சீன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Oct 2026 11:51 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதில் முதலாவதாக வெளியான கருப்பு ஒரு ஃபேண்டசி ஆகசன் படமாகவும் இரண்டாவதாக வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரொமாண்டிக் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாகவும் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களுமே நடிகர் சூர்யாவிற்கு ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கருப்பு படம் சூர்யாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக சாதனைப் படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படத்தை மலையாள சினிமாவில் பிரபல இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவில் இறுதியாக வெளியான ஆவேஷம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் சீன் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:

இந்த சீன் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நஸ்ரியா, நஸ்லேன் என மலையாள நடிகர்கள் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது இந்த சீன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான கோகுலம் மூவிஸ் பெற்றுள்ளதாக சீன் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் சொன்ன விமர்சனம்!

சீன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கேங்ஸ்டரா மக்கள் மனதில் இடம் பிடித்தாரா விஜய் சேதுபதி? பத்தா படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ!

Follow Us