அது எனக்கு மனவேதனையை அளித்தது… டோரதி படத்திற்கான நெகட்டிவ் விமர்சனம் குறித்து பேசிய நடிகர் சனந்த்
Actor Sananth talks about negative comments | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சனந்த். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் டோரதி படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் தன்னை காயப்படுத்தியதாக வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டிமாண்டி காலனி. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் அருள் நிதி நடித்து இருந்த நிலையில் அவரின் நண்பனாக நடிகர் சனந்த் நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக நடிகர் சனந்த் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிகர் சனந்த் நடிப்பில் வெளியான படங்களான ஜில் ஜங் ஜக், மெர்குரி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், நீலிரா, ஹார்டின் ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் சனந்த் தற்போது நடித்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் டோரதி.
இந்தப் படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி உள்ளார். நடிகர் ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்து உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே தொடர்ந்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் என இரண்டுமே பெற்று வருகின்றது.




டோரதி படத்திற்கான நெகட்டிவ் விமர்சனம் குறித்து பேசிய சனந்த்:
மேலும் இந்தப் படத்தில் நடிகர் சனந்த் ஒரு திருநங்கையாக நடித்து இருந்தார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சனந்த் கூறியதாவது, டோரதி விஷயத்தில் இப்போது எனக்குக் கலவையான உணர்வுகள் உள்ளன. இணையத்தில் வெளிப்பட்ட வெறுப்புணர்வு எனக்கு மனவேதனையை அளித்தது. ஆனால், உண்மையான பார்வையாளர்களிடமிருந்து வந்த உணர்வுப்பூர்வமான செய்திகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… தர்மன் படத்தின் 3-வது ஷெடியூல் முடிவடைந்தது… இயக்குநர் வெளியிட்ட பதிவு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Sananth: I have mixed feelings right now with #Dorothy, due to the online haterad, it was hurtful for me. But with real audience’s emotional message I’m happy #Rishikanth: I’m just started seeing social media comments from #ModhaRathri. There’s also Fake and real things. But…
— AmuthaBharathi (@CinemaWithAB) September 29, 2026
Also Read… பிக்பாஸில் சூடுபிடிக்கும் ஆட்டம்… வீட்டிற்குள் வரும் 3 வைல்கார்ட் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!