Abnil Avan: ஸ்ட்ரெயிட் அவுட்டா சார்பட்டா.. அன்பில் அவன் படத்திலிருந்து புது பாடல் வெளியானது!
Straight Outta Sarpatta Promo Song: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அசோக் செல்வன். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் அன்பில் அவன். இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், தற்போது இப்படத்திலிருந்து புது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் அசோக் செல்வன் (Ashok Selvan) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துபவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug life). மணிரத்தினம் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாகவுள்ள திரைப்படம்தான் அன்பில் அவன் (Anbil Avan). இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் (R Kaarthikeyan) இயக்கியுள்ள நிலையில், அசோக் செல்வன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா (Govindh Vasantha) இசையமைத்துள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது. “ஸ்ட்ரெயிட் அவுட்டா சார்பட்டா” (Straight Outta Sarpatta) என்ற புரோமோ பாடல் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: கவின் – நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!
அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்திலிருந்து வெளியான ஸ்ட்ரெயிட் அவுட்டா சார்பட்டா பாடல் குறித்த பதிவு:
Making you fall in love with the pair even more ❤️
Straight Outta Sarpatta – Promo song from #AnbilAvan out now.
A #GovindVasantha Musical.🎙️ Tamizh, Rockzane.
Catch the @AshokSelvan @PreityMukundan starrer in theatres worldwide, from October… pic.twitter.com/fAp9SwUtI0
— Ayngaran International (@Ayngaran_offl) September 28, 2026
அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:
இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் இயக்கியுள்ள நிலையில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அசோக் செல்வன் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகவும், பணக்கார பெண்ணாகவும் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆடியோ லான்ச் இல்லையா? ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முழு ஆல்பம் எப்போது வெளியாகும்?
இந்த படத்திற்காக அசோக் செல்வன் பல சவால்களை செய்துள்ளார். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 70 அடி உயரத்திலிருந்து ஏரி ஒன்றில் குதித்து சவாலான காட்சியில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில், இப்படத்தை 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.