கவின் – நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!
Hi Movie OTT Review Here | தமிழ் சினிமாவில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ஹாய். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பலப் பாடல்களை எழுதி ரசிகர்களிடையே பிரபலமானவர் விஷ்ணு எடவன். தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக பலரது படங்களுக்கு இவர் பாடல்களை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியராகா மக்களிடையே பிரபலமானவராக இருந்த விஷ்ணு எடவன் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார். அப்படி இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கிய முதல் படம்தான் ஹாய். ரொமாண்டிக் காமெடி ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த ஹாய் படம் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரபு, கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார், VTV கணேஷ், சத்யன், அம்ருதா சீனிவாசன், ஆதித்ய கதிர்,
குரைஷி, மிர்ச்சி கெமி, காவ்யா அறிவுமணி, FEFSI விஜயன், ரெஞ்சி பணிக்கர், அம்மு ராமச்சந்திரன், டிஎஸ்ஆர் சீனிவாசன், பாலா ஹாசன் மற்றும் சுஹாசினி மணிரத்னம் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
கவின் – நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் படம் எப்படி இருக்கு?
இந்த ஹாய் படத்தில் சிறு வயதில் இருந்தே காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் கவினுக்கு காதலே செட்டாகவில்லை. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த கவினுக்கு வீட்டில் உள்ளவர்கள் அரேஞ்ச் மேரேஜ் செய்து வைக்க நினைக்கிறார்கள் இதானால் வீட்டைவிட்டு ஓடி சென்னையில் வேலைபார்த்து வருகிறார்.




Also Read… Meiyazhagan: யாரோ இவன் யாரோ.. 2 ஆண்டுகளை நிறைவு செய்த மெய்யழகன் திரைப்படம்!
அதே வேலையில் குடிகார அப்பாவின் மகளாக உள்ள நயன்தாரா தன்னை கட்டாயப்படுத்தி நடக்க இருந்த திருமணத்தில் இருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். அப்படி வந்த இடத்தில் கவினை சந்திக்கிறார். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் கவினுக்கு நயன்தாரா மீது காதல் ஏற்படுகின்றது.
ஆனால் நயன்தாராவிற்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கு செல்ல நினைக்கிறார். இப்படியான சூழலில் கவின் தனது காதலை நயன்தாராவிடம் வெளிப்படுத்தினாரா இல்லையா? இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… என்னப்பா கஷ்டமா இருக்கா? அவினாஷ் – ஜேசனை வார்த்தைகளால் வெளுத்துவாங்கிய லக்ஷ்மி பிரியா – புரோமோ!